14th of August 2015
சென்னை:என்னதான் சந்தானம் ஹீரோவாக நடிக்க ஆரம்பித்து விட்டாலும் கூட, அவர் மற்ற ஹீரோக்களின் நண்பனாக நடிக்கும் படத்திற்கு இருக்கும் மவுசே தனி தான்.. சொல்லப்போனால் அதில் தான் காமெடிக்கு கூடுதல் ஸ்கோப்பும் இருக்கிறது. அந்தவகையில் வரும் ஆகஸ்ட்-14ஆம் தேதி சந்தானமே எதிர்பாராத விதமாக அவருக்கு டபுள் த்ரீட்டாக அமைந்துள்ளது.
அன்றைய தினம் ஆர்யாவும் சந்தானமும் நடித்துள்ள ‘வாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க’ படம் மட்டும் தான் வெளியாவதாக இருந்தது. இப்போது சிம்புவும் சந்தானமும் இணைந்து நடித்துள்ள ‘வாலு’ படமும் பிரச்சனைகள் முடிந்து அதே தேதியில் ரிலீசாகிறது.. சொல்லப்போனால் சந்தனத்துக்கு போட்டியாக சந்தானமே வந்துவிட்டார் என்றுகூட சொல்லலாம்.
ஆர்யா படம் சுமார் 1200 தியேட்டர்களிலும், சிம்பு படம் 1000 தியேட்டர்களிலும் ரிலீஸாக இருப்பதால் தியேட்டர்களில் எங்கு பார்த்தாலும் ஒரே சந்தானம் மயமாகத்தான் இருக்கும். கடந்த தைப்பொங்கலன்று கூட சந்தானம் நடித்த ‘ஐ’ மற்றும் ‘ஆம்பள’ என இரண்டு படங்கள் ஒரேநாளில் வெளியானது குறிப்பிடத்தக்கது.
Comments
Post a Comment