2nd of August 2015
சென்னை:பாலா தயாரிப்பில், சற்குணம் இயக்கத்தில் அதரவா ஹீரோவாக நடிக்க உருவாகியுள்ள படம் தான் சண்டிவீரன்’. கயல் ஆனந்தி கதாநாயகியாக நடித்துள்ளார். கோலிசோடா படத்திற்கு இசையமைத்த அருணகிரி என்பவர்தான் இந்தப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.
இந்தப்படத்தின் இசை வெளியீடு விழா ஏற்கனவே நடைபெற்றுவிட்டது. வரும் ஆகஸ்ட்-7ஆம் தேதி படம் வெளியாக உள்ள நிலையில், இப்போது லேட்டஸ்ட்டாக வீடியோ பாடல் ஒன்றை வெளியிட நாளை இருக்கிறார்கள். இதை சூர்யா தனது அதிகாரப்பூர்வமான ட்விட்டர் பக்கத்தில் இன்று காலை வெளியிடுகிறார்.
Comments
Post a Comment