9th of August 2015
சென்னை:திரும்பிய பக்கமெல்லாம் நகரின் எந்த இடத்திலாவது ஹன்ஷிகாவின் பட போஸ்டர் ஒட்டப்படாமல் இருக்காது என்கிற அளவுக்கு தொடர்ந்து ஹன்ஷிகாவின் படங்கள் சீரான இடைவெளியில் வெளியாகிக்கொண்டு இருக்கின்றன. மும்பையிலிருந்து வந்த நடிகைகளில் குஷ்பூவிற்கு பிறகு ஹன்ஷிகாவிற்குத் தான் தமிழ் ரசிகர்கள் மிகப்பெரிய அங்கீகாரம் கொடுத்திருக்கிறார்கள்.
சமீபகாலமாக காமெடி ஏரியாவிலும் புகுந்து விளையாடுகிறார் ஹன்ஷிகா.. சமீபத்தில் ஜெயம் ரவியுடன் இவர் நடித்த ‘ரோமியோ ஜூலியட்’ படத்தில் காமெடிக்கு என தனி ஆள் இல்லாத குறையை போக்கி, ஒற்றை ஆளாக தனது காமெடியால் அந்தப்படத்தை தாங்கிப்பிடித்தார் ஹன்ஷிகா. அடுத்து விஜய்யுடன் நடித்துள்ள ‘புலி’அடுத்தமாதம் ரிலீஸாக இருக்கிறது.
அதுமட்டுமல்ல, நடிப்பு, சம்பாத்யம், தன் குடும்பம் என இருக்கும் நடிகைகள் மத்தியில் ஹன்ஷிகா ரொம்பவே வித்தியாசமானவர். தனது ஒவ்வொரு பிறந்த நாளையொட்டி, ஒரு குழந்தையை அவர் தத்து எடுத்து வளர்க்கிறார். அந்தவகையில் அவர் தற்போது 30 குழந்தைகள் வரை தத்து எடுத்து வளர்த்து வருகிறார்.
இந்த ஒரு காரணத்திற்காகவே இன்று பிறந்தநாள் காணும் ஹன்ஷிகா நூறு வருடம் நலமாக வாழவேண்டும் என நமது poonththalir-kollywood
தனது இனிய பிறந்தநாள் வாழ்த்துக்களை ஹன்ஷிகாவுக்கு மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறது.
Comments
Post a Comment