தமன்னா நான்கு வருட இடைவெளிக்குப் பிறகு கார்த்தியுடன் ஜோடி!!!

4th of August 2015
சென்னை:பையா, சிறுத்தை'; ஆகிய படங்களில் கார்த்திக்கு ஜோடியாக நடித்தவர் தமன்னா. அதன் பின் திடீரென எழுந்த காதல் கிசுகிசுவால் தமிழ்ப் படங்களில் நடிப்பதையே தவிர்த்தவர் தமன்னா. இப்போது நான்கு வருட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் கார்த்தியுடன் ஜோடி சேர்ந்து நடித்து வருகிறார். 

தமிழ், தெலுங்கில் தயாராகும் இந்தப் படத்திற்கு தெலுங்கில் மட்டும் 'தோஸ்த்' என பெயர் வைத்திருக்கிறார்கள். ஒரு பிரெஞ்சுப் படத்தின் தழுவலாகத்தான் இந்தப் படம் உருவாவதாகச் சொல்லப்படுகிறது.

நாகார்ஜுனாவும் படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார். ஹைதராபாத்தில் ஆரம்பமான இந்தப் படத்தின் படப்பிடிப்பு தற்போது பிரான்ஸ் நாட்டில் நடந்து வருகிறது.
 
அங்கு கடந்த 15 நாட்களாக படப்பிடிப்பு நடத்தியிருக்கிறார்கள். மேலும் சில இடங்களிலும் இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெறும் எனத் தெரிகிறது.

Comments