30th of August 2015
சென்னை:பாஸ் என்கிற பாஸ்கரன்’, ராஜா ராணி மற்றும் ‘ஆரம்பம்’ படங்களில் இணைந்து நடித்த ஆர்யா, நயன்தாரா மீண்டும் ஒரு படத்தில் இணைந்து நடிக்கிறார்கள். ஆனால் இது தமிழ் படம் இல்லை, ‘புதிய நியமம்’ என்ற மலையாள படம்! மம்முட்டி கதாநாயகனாக நடிக்கும் இப்படத்தை ஏ.கே.சாஜன் இயக்குகிறார்.

கிரைம் த்ரில்லர் படமாக உருவாகி வரும் இப்படத்தில் மம்முட்டி பிரபலமான ஒரு வழக்கறிஞராக நடிக்க, மம்முட்டியின் மனைவியாக நடிக்கிறார் நயன்தாரா. இவர்களுடன் ஒரு முக்கிய கேரக்டரில் ஆர்யாவும் நடிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது கேரளாவில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
சமீபத்தில் மம்முட்டி, நயன்தாரா ஜோடியாக நடித்து மலையாளத்தில் வெளியாகி வெற்றி பெற்ற படம் ‘பாஸ்கர் தி ராஸ்கல்’. சித்திக் இயக்கிய இப்படத்தை தொடர்ந்து மீண்டும் மம்முட்டி, நயன்தாரா இப்படத்தில் இணைந்திருக்கிறார்கள். ஏற்கெனவே ‘உருமி’ ‘டபுள் பேரல்’ ஆகிய மலையாள படங்களில் நடித்துள்ள ஆர்யா நடிக்கும் மூன்றாவது மலையாள படம் இது.
Comments
Post a Comment