ஹேப்பி பர்த்டே ட்டு ‘பிரின்ஸ்’!!!

9th of August 2015
சென்னை:டோலிவுட் இளவரசன் என ஆந்திர ரசிகர்களாலும் திரையுலகத்தினராலும் செல்லமாக அழைக்கப்படுபவர் மகேஷ்பாபு. தெலுங்கு சூப்பர்ஸ்டார் கிருஷ்ணாவின் வாரிசு..  இவரை நேரில் பாக்கும்போது இந்தப்பூனையும் பால் குடிக்குமாங்கிற மாதிரி சாந்தமான ஆளாக இருப்பார். ஆனால் சினிமான்னு வந்துட்டா அதுவும் ஆக்‌ஷன் காட்சி என்றால் ஆள் அப்படியே ருத்ரமூர்த்தியா மாறிவிடுவார்.
இவர்  நடித்த ஒக்கடு, அத்தடு, சைனிக்கூடு, தூக்குடு,  சீதம்மா வாகிட்லோ சிரிமல்லி செட்டு, ‘ஆகடு’ , சமீபத்தில் வெளியான ‘ஸ்ரீமந்துடு’ என ‘டுவில் முடியும் படங்கள் எல்லாமே சூப்பர்ஹிட் ஆனவைதான். இதுமகேஷ்பாபுவிற்கு எதேச்சையாக கூட அமைந்திருக்கலாம்.

இதுவரை ரீமேக் மூலமாகவோ, அல்லது ரிலீஸாகி பல நாட்கள் கழித்து டப்பிங் மூலமாகவோ கொஞ்சம் தாமதமாகத்தான்தான் தமிழுக்கு வருவார் மகேஷ்பாபு. ஆனால் கடந்த வெள்ளியன்று அவரது ‘ஸ்ரீமந்துடு’ படம் ஆந்திராவில் வெளியான அதே தினத்தில் தமிழிலும் ‘செல்வந்தன்’ என்கிற பெயரில் வெளியானதன் மூலம் தற்போது தமிழிலும் தனது ஆதிக்கத்தை வலுவாக்கியுள்ளார்.

இன்று பிறந்தநாள் காணும் தெலுங்குதேச இளவரசனுக்கு நமது poonththalir-kollywood தனது இனிய பிறந்தநாள் வாழ்த்துக்களை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறது

Comments