போட்டோஷூட்டுக்கு தயாராகிறார் ரஜினி..?

18th of August 2015
சென்னை:பொதுவாக ரஜினி படம் ஆரம்பிக்கப்படுவதாக வெளியாகும் விஷயங்கள் யூகங்களாக ஆரம்பித்து, பின்னர் கொஞ்ச நாட்கள் கழித்து தான் சம்பந்தப்பட்ட இயக்குனறாலோ அல்லது தயாரிப்பாளராலோ உறுதிசெய்யப்பட்டு. ரஜினியே நேரடியாக தனது படத்தையும், டைட்டிலையும் அறிவிப்பதையும் விட்டு ஒதுங்கி நீண்ட நாட்களாகிவிட்டது.

தற்போது ரஞ்சித் இயக்கும் படத்தில் ரஜினி நடிக்கும் விஷயம் கூட இப்படித்தான் வெளியானது. ஆனால் பட ஷூட்டிங் தொடங்குவதை முறையான அறிவுப்புடன் துவங்க நினைக்கும் ரஞ்சித் ரஜினியின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை அன்றைய தினமே வெளியிட முடிவு செய்துள்ளாராம். இதற்காக ரஜினியை வைத்து ஸ்பெஷல் போட்டோஷூட் ஒன்றை நடத்த இருப்பதாகவும் சொல்லப்படுகிறது.

பத்து வருடங்களுக்கு முன் கே.எஸ்.ரவிகுமார் இயக்கத்தில் ‘ஜக்குபாய்’ படத்தில் ரஜினி நடிப்பதாக அறிவிப்பு வெளியானபோது ரஜினி துப்பாக்கியை அருகில் வைத்தபடி முழங்காலிட்டு அமர்ந்திருக்கும் போஸ்டர் ஒன்று வெளியிடப்பட்டது. அந்தப்படம் கைவிடவும் பட்டது.ஆனால் அதன்பின் ரஜினி நடித்த எந்தப்படங்களுக்கும் பட அறிவுப்பு தினத்தன்றே பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகவேயில்லை.

Comments