மீண்டும் தீவிர அரசியலில் ஈடுபடப் போவதாக நடிகை ரம்யா தெரிவித்துள்ளார்!!!

2nd of August 2015
சென்னை:பாராளுமன்ற தேர்தலில் மண்டியா தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்டார் நடிகை ரம்யா. ஆனால், தோல்வியை தழுவினார். இதனால், நடிகை  ரம்யா கடந்த சில மாதங்களாக அரசியலில் இருந்து ஒதுங்கி இருந்தார். 
இந்த நிலையில் மண்டியாவில் தற்கொலை செய்த விவசாயிகளின் குடும்பத்தினரை சந்தித்து நடிகை ரம்யா ஆறுதல் கூறினார்.

மேலும், முன்னாள் முதலமைச்சர் கிருஷ்ணாவை, சந்தித்தும் பேசினார். இந்த சந்திப்பு சுமார் 30 நிமிடம் நீடித்தது.  பின்பு,  ரம்யா செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

முதலமைச்சர் கிருஷ்ணா எங்கள் குடும்ப நண்பர். நான் எந்த ஒரு விஷயத்திலும் ஈடுபடும் முன்பு அவரின் அறிவுரையை கேட்பது வழக்கம். அதனால்தான் அவரைக் காண வந்தேன். இனிமேல் அரசியலில் தீவிரமாக ஈடுபட உள்ளேன். அதற்காக, அவரது அறிவுரையை கேட்க வந்தேன் என்றார்.
 

Comments