6th of August 2015
சென்னை:அட்டகத்தி படத்தில் நடித்த நந்திதா அந்த ஆடிசனுக்கு வரும்போதே, துண்டு துக்கடா என்றுதான் அணிந்து வந்திருக்கிறார். ஆனால் கதைப்படி அவர் வில்லேஜ் பெண்ணாக மாற வேண்டும் என்பதால் அவரை பாவாடை தாவணிக்கு மாற்றியிருக்கிறார் டைரக்டர் ரஞ்சித். அந்த கெட்டப்பும் தனக்கு புதிய அனுபவமாக இருந்ததால் அப்போதைக்கு என்சாய் பண்ணிதான் நடித்திருக்கிறார் நந்திதா.

ஆனால், அந்த படத்திற்கு பிறகு கிடைத்தது எல்லாமே அதுபோன்ற ஹோம்லியான வேடங்கள் என்பதால் இப்போது அவருக்கு வெறுப்பு ஏற்பட்டு விட்டதாம். இதனால் தனக்கு பிறகு நடிக்க வந்த நடிகைகளெல்லாம் ஓரிரு படத்தோடு பத்து, பதினைந்து என்று லட்சங்களை எண்ணிக்கொண்டு செல்ல தன்னால் ஐந்தாறு லட்சங்களைகூட தாண்ட முடியவில்லையே என்று பீல் பண்ணிக்கொண்டிருக்கிறார்.
அதனால், இதை இப்படியே விட்டால் சரியில்லை என்று ஏற்கனவே படப்பிடிப்பு தளங்களுக்கு வந்ததை விடவும் இப்போது படுகவர்ச்சியாக வந்து டைரக்டர்களை கிறங்கடிக்கிறாராம் நந்திதா. என்னாலும் ஹன்சிகா, தமன்னா போன்று கவர்ச்சி ஹீரோயினாக ஜொலிக்க முடியும் என்றும் வாய்ப்பு கேட்கத் தொடங்கியிருக்கிறார்.
Comments
Post a Comment