பால்கியின் அடுத்தப் படம் - கி அண்ட் கா!!!

2nd of August 2015
சென்னை:பாலிவுட் இயக்குநர் பால்கி, தனது அடுத்தப் படம் பற்றிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அர்ஜுன் கபூர் மற்றும் கரீனா கபூர் நடிக்கும் இந்தப் படத்துக்கு கி அண்ட் கா என்று பெயர் வைத்துள்ளார் பால்கி. இதுபற்றி அவர் கூறும்போது, கி அண்ட் கா என்று தலைப்பிட்டுள்ளேன்.

ஹிந்தி மொழியில் மனிதர்களுக்கு மட்டுமல்ல, பொருள்களுக்கும் பாலினம் உண்டு. பாலினம் ஒரு பொருட்டே இல்லை என்பதுதான் கி அண்ட் கா என்றார். இவர் இதற்கு முன்னதாக சீனி கம், பா, ஷமிதாப் என மூன்று படங்களை இயக்கியுள்ளார். இந்த மூன்று படங்களுக்கும் இளையராஜா தான் இசையமைத்தார்.
 
அர்ஜுனும் கரீனாவும் முதல்முறையாக ஜோடியாக நடிக்கிறார்கள். இந்தப் படத்தில் அமிதாப் பச்சன் கெளரவ வேடத்தில் நடிக்க உள்ளார். ஒளிப்பதிவு - பி.சி. ஸ்ரீராம்.  

Comments