9th of August 2015
சென்னை:பல வெற்றி படங்களை தயாரித்த ராஜ் கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் தயாரிப்பில், ராஜேஷ் M செல்வா இயக்கத்தில் கமல்ஹாசன், பிரகாஷ்ராஜ், த்ரிஷா நடிப்பில் தமிழில் தூங்காவனம் என்றும் தெலுங்கில் சீகட்டி ராஜ்யம் என்ற பெயரில் ஒரே நேரத்தில் உருவாகிவருகிறது.
தூங்காவனம் படத்தின் படப்பிடிப்பு மொத்தம் 38 நாட்களில் எடுத்து முடித்துவிட்டார்கள். இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் நடைபெற்றது. கமல்ஹாசன் எழுதி பாடியுள்ள பாடலுடன் படப்பிடிப்பு முடிவடைந்துள்ளது. தொழில்நுட்ப பணிகள் முழுவீச்சில் நடைபெற தொடங்கியுள்ளது. மிகவிரைவில் இப்படத்தின் அட்டகாசமான டிரெய்லர் வெளிவரவிருக்கிறது. 'உத்தம வில்லன்' படத்தைத் தொடர்ந்து கமல்ஹாசன் தனது இணை இயக்குநர் ராஜேஷ் இயக்கத்தில் 'தூங்காவனம்' படத்தில் நடித்து வந்தார். த்ரிஷா, பிரகாஷ்ராஜ், மதுஷாலினி, யூகி சேது, ஆஷா ஷரத் உள்ளிட்ட பலர் கமலுடன் நடித்து வந்தார்கள். படத்தில் கமல் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார். இப்படம் ஒரே இரவில் நடக்கும் த்ரில்லர் கதையாகும். இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து சென்னை ஈ.சி.ஆர் சாலையில் PUB போன்ற அரங்கு அமைத்து முக்கியமான காட்சிகள் அனைத்தையும் படமாக்கி வந்தார்கள். இந்நிலையில், 'தூங்காவனம்' படத்தின் படப்பிடிப்பு முழுமையாக முடிவுற்று இருக்கிறது. இறுதிகட்டப் பணிகள் துவங்கப்பட்டுள்ளன. ராஜ்கமல் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தை ஒரே கட்டப் படப்பிடிப்பில் மொத்தமாக முடித்துவிட்டார்கள்.
'ஸ்லீப்லஸ் நைட்' என்ற பிரெஞ்ச் படத்தின் அதிகாரப்பூர்வ ரீமேக் தான் 'தூங்காவனம்' என்பது குறிப்பிடத்தக்கது. இரவு நேரத்தில் நடக்கும் சம்பவத்தில் இருந்து ஒரு போலீஸ் அதிகாரி எப்படி தனது மகனைக் காப்பாற்றினார் என்பதே 2011ம் ஆண்டு வெளியான 'ஸ்லீப்லஸ் நைட்' திரைப்படத்தின் கதையாகும்.

Comments
Post a Comment