ஆர்யா – அனுஷ்காவுடன் விவாதம் நடத்த தயாரா..?!!!

30th of August 2015
சென்னை:இரண்டாம் உலகம் படத்தை தொடர்ந்து இரண்டாம் முறையாக ஆர்யா – அனுஷ்கா இணைந்து நடித்துவரும் படம் தான் ‘இஞ்சி இடுப்பழகி’. இந்தப்படத்தில் அனுஷ்காவின் கெட்டப் தொடர்பான போஸ்டர் வெளியானதில் இருந்து கடந்த இரண்டு வாரமாக இந்தப்படம் தான் ஆன்லைனில் அதிகம் பேசப்படும், ஷேர் செய்யப்படும் ஹாட் டாபிக்காக இருக்கிறது…

சந்தேகமே இல்லாமல் இந்தப்படம் உடற்பயிற்சியின் அவசியத்தை எடுத்துச்சொல்லும் படமாக இருந்தாலும் கூட, எது உண்மையான அழகு என்பதுதான் படத்தின் மையக்கருவகை இடம்பிடித்துள்ளதாம். அதனால் இது குறித்து ரசிகர்களிடம் சமூக வலைதளங்களில் விவாதம் நடத்த ‘இஞ்சி இடுப்பழகி’.டீம் தயாராகி வருகிறது.

அதாவது அனுஷ்காவுடைய உருவ அமைப்பு பற்றிய கருத்துக்களுக்கு அனுஷ்காவின் பதில் “அழகு என்பது உருவத்தில் உருவானது அல்ல. நாம் எப்படி இருக்கிறோமோ அப்படியே நம்மை ஏற்றுக் கொள்வதுதான் சரி” என்கிற கோணத்தில் விவாதிக்க உள்ளார்..

ஆனால் எப்போதும் உடர்பயிற்சியை பற்றியே பேசும் ஆர்யாவோ ‘உடற்பயிற்சியின் அத்தியாவசியத்தையும், ஊட்டச்சத்து உள்ள உணவின் அவசியத்தையும் பேச இருக்கிறார். அதுமட்டுமல்ல.. இதையொட்டி ரசிகர்களுக்கு ஒரு சிறப்பு போட்டியும் நடக்க இருக்கிறதாம். படத்தின் இசை வெளியீட்டை செப்டம்பர் முதல் வாரத்தில் நடத்த இருக்கிறார்களாம்.








Comments