ரஜினியுடன் ஜோடியாக நடிப்பது என் அதிர்ஷ்டம்: ராதிகா ஆப்தே ‘குஷி’ பேட்டி!!!

3rd of August 2015
சென்னை:ரஜினி நடிப்பில் ரஞ்சித்தின் அடுத்தப் பட கதாநாயகி குறித்த தகவல் உறுதிபடுத்தப்பட்டுள்ளது. ரஜினியுடன் ஜோடியாக  நடிப்பது என் அதிர்ஷ்டம் என பிரபல பாலிவுட் கதாநாயகி ராதிகா ஆப்தே ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.

ரஞ்சித் இயக்கும் ரஜினியின் படத்தில் ராதிகா ஆப்தே ஹீரோயினாக நடிக்க உள்ளார் என சில நாள்களுக்கு முன்பு செய்திகள் வெளிவந்தன. ஆனால் இத்தகவலை யாரும் உறுதிப்படுத்தவில்லை.
 
ஆனால் இப்போது ஓர் ஆங்கில நாளிதழுக்கு அளித்த பேட்டியில் இதை உறுதிப்படுத்தியுள்ளார் ராதிகா ஆப்தே. அதில் அவர் கூறியதாவது:

இந்த இன்பதிர்ச்சியில் இருந்து வெளியே வர கொஞ்ச நாள் ஆகும். ரஜினியை விடவும் வேறு யாரும் பெரிதல்ல. இயக்குநர் ரஞ்சித்தும் மிகவும் திறமையானவர். இது நிஜமானதில் நான் மிகவும் ஆச்சரியமடைந்துள்ளேன். ரஜினியைச் சந்திப்பதிலும் நான் மிகவும் ஆர்வமாக உள்ளேன்.
 
இதுபோன்ற படங்களுக்குப் பலத்த போட்டி இருக்கும். எனவே ரஜினியுடன் ஜோடியாக நடிப்பதை அதிர்ஷ்டமாகக் கருதுகிறேன்.

கதை மிகவும் வித்தியாசமானது. என்னுடைய கதாபாத்திரமும் பலமாக இருக்கும். சும்மா நடனமாடிவிட்டுச் செல்வதை விடவும் நடிக்க வாய்ப்புள்ள ஒரு படம். அப்படி இருந்திருந்தாலும் இந்தப் படத்தில் நடித்திருப்பேன். ரஜினியுடன் ஒரு படத்தில் நடிப்பதே அபாரமானது. என்னுடைய கதாபாத்திரமும் இயக்குநரும் இன்னும் கூடுதலான மகிழ்ச்சியாக அமைந்துள்ளது என்றார்.

Comments