25th of August 2015
சென்னை:கிட்டத்தட்ட பலவிதமான வெரைட்டியான ரோல்களில் தன்னை நிரூபித்து வரும் தனுஷுக்கு இன்னும் இரண்டு சத்திய சோதனைகளில் தன்னை நிரூபிக்க வேண்டிய கட்டாயம் இருக்கிறது. ஒன்று போலீஸ் கேரக்டரில் நடிப்பது… மற்றொன்று டபுள் ஆக்சன் வேடத்தில் நடிப்பது. இந்த இரண்டு ஏரியாவில் தான் தனுஷ் இன்னும் கால் வைக்கவில்லை..
இளம் நடிகர்களில் விஜய், அஜீத்தில் தொடங்கி, ஜெயம் ரவி, ஜீவா, சிம்பு வரை, அது வெற்றியோ தோல்வியோ தங்களது டபுள் ஆக்சன் ரோல் கனவை நனவாகி விட்டார்கள்.. அதேபோலத்தான் போலீஸ் கேரக்டர் கனவையும் கிட்டத்தட்ட அனைவரும் செய்துவிட்டார்கள்.
ஆனால் தனுஷ் இதுநாள் வரை தனது உடல்வாகிற்கு போலீஸ் கேரக்டர் செட்டாகாது என்பதால் போலீஸ் சப்ஜெக்ட்டுகளில் ஆர்வம் காட்டாமல் இருந்தார். அதனால் தான் தனக்கு சொலப்பட்ட காக்கிச்சட்டை கதையைக்கூட சிவகார்த்திகேயனுக்கு மாற்றிவிட்டார்.
ஆனால் டபுள் ஆக்சன் ரோலில் நடிப்பதற்கு தனுஷுக்கு எந்தவித தயக்கமும் இல்லை. நல்ல கதைக்காக மட்டும் தான் காத்துக்கொண்டிருக்கிறார். இப்போது லேட்டஸ்ட் தகவலாக எதிர் நீச்சல் துரை செந்தில்குமார் தனுஷுக்கு ஏற்ற டபுள் ஆக்சன் கதையை சொல்லி ஒகே பண்ணியுள்ளதாக சொல்லப்படுகிறது.
இதில் இரண்டு தனுஷுமே அண்ணன் தம்பியாகவே நடிக்கிறார்களாம். தற்போது பிரபு சாலமன் படத்தில் நடித்துவரும் தனுஷ், அதை முடித்துவிட்டு இந்தப்படத்தில் நடிக்க இருக்கிறாராம். படப்பிடிப்பு வரும் அக்டோபர் மாதத்தில் துவங்க இருக்கிறதாம்.
Comments
Post a Comment