இது என்ன மாயம்: திரை விமர்சனம்!!!

6th of August 2015
சென்னை:சினிமாவில் காதல் விஷயங்களில் ஹீரோக்களுக்கு அமைவது போன்ற சூழ்நிலைகள் நிஜ வாழ்வில் அமைந்தால் எப்படி இருக்கும், அப்படி ஒரு விஷயத்தை வைத்து இயக்குனர் விஜய் காட்டியிருக்கும் ஒரு ஜோக்கர் நிகழ்ச்சி தான் 'இது என்ன மாயம்'.

நாயகன் விக்ரம் பிரபு, தனது நண்பர்களுடன் சேர்ந்து நாடக குழு ஒன்றை நடத்தி வருகிறார். ஆலே இல்லாத கடையில் டீ ஆத்தின மாதிரி, விக்ரம் பிரபு குழுவினர் நடத்தும் நாடகங்களின் நிலை இருக்க, விக்ரம் பிரபு உள்ளிட்ட அவரது நண்பர்கள் பொருளாதர சிக்கலை சந்திக்க நேரிடுகிறது.
இதற்கிடையில், தங்களது நாடக கலையை பயன்படுத்தி, சினிமாவில் நிகழும் சம்பவங்கள் போல நிஜத்தில் செய்து, ஒன் சைட் காதலை டூ சைட் காதலாக மாற்றும் ஒரு நிறுவனத்தை ஆரம்பித்து முடிவு செய்கிறது விக்ரம் பிரபு  அன்ட் கோ.
யார் யாரை வேண்டுமானாலும் காதலிக்கட்டும், அது உண்மையானா காதலா?, அந்த பெண்ணுக்கு வேறு எந்த காதலும் இல்லையா? என்பதை தீர விசாரித்து, பிறகு தங்களது நாடக யுக்தியை பயன்படுத்தி காதலை சேர்த்து வைக்கும், இந்த நிறுவனம் பெரிய அளவில் வளர, அந்த நிறுவனத்தை அணுகிறார் பணக்கராரரான நவ்தீப். தொழிலாக இருந்தால் ஒரே பேச்சில் முடித்துவிடுவேன், காதல் என்பதால் தடுமாறுகிறேன், அதனால் என்னுடைய காதலை சேர்த்து  வையுங்கள், என்று சொல்ல, நவ்தீப்பின் காதலியின் விபரத்தைக் கேட்கும் விக்ரம் பிரபு அதிர்ச்சியாகிறார். காரணம் அவர் படத்தின் நாயகி மட்டுமல்ல, விக்ரம் பிரபுவின் முன்னாள் காதலியும் கூட.
தனது காதலியை வேறு ஒருவருடன் சேர்த்து வைப்பதற்காக, தனது நாடக கலையை பயன்படுத்தும் விக்ரம் பிரபு, நாயகி கீர்த்தி சுரேஷை நவ்தீப்புடன் சேர்த்து வைத்தாரா இல்லையா என்பது தான் க்ளைமாக்ஸ். இத்துடன், கீர்த்தி சுரேஷுக்கும் விக்ரம் பிரபுவுக்கும்  இடையே உள்ள காதல் எப்படி உடைந்தது, உடைந்த காதல் மீண்டும் ஒன்று சேர்ந்ததா இல்லையா என்பது ஒரு கதை.
விக்ரம் பிரபு நடிப்பு ஒகே. காதல் காட்சிகளிலும் கல்லூரி காட்சிகளிலும் கவர்கிறார். அறிமுக நாயகி கீர்த்தி சுரேஷ், ஆண்மை கலந்த அழகில் மிரட்டுகிறார். சிறிய வேடம் என்றாலும் நவ்தீப் தனது வேலையை சரியாக செய்திருக்கிறார். 
ஜி.வி.பிரகாஷின் இசையும், நிரோஷ்ஷாவின் ஒளிப்பதிவும் படத்திற்கு பெரிய பலம்.
'சைவம்' என்ற ஹைக்கூவைக் கொடுத்த விஜய், அடுத்ததாக பெரிய காதல் கவிதை எழுதப் போகிறார், என்று நினைத்தால், கோமாளித்தனமான ஒரு விஷயத்தை சொல்லி நம்மை ஏமாற்றி விட்டார்.

Comments