ரஜினியின் புதுப் படத் தலைப்பு என்ன தெரியுமா?!!!

15th of August 2015
சென்னை:ரஜினி நடிக்கும் புதிய படத்துக்கு கண்ணபிரான் என்று தலைப்பிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ரஞ்சித் இயக்கத்தில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு செப்டம்பரில் தொடங்குவதாகச் சொல்லப்பட்டிருக்கிறது. அந்தப்படத்துக்கு இன்னும் பெயர் வைக்கவில்லை.

ரஞ்சித் அந்தப்படம் பற்றிப் பேசியவற்றை வைத்து, படத்துக்குக் காளி என்று பெயர் வைக்கவிருப்பதாகச் சொல்லப்பட்டது. ஆனால் 'காளி' என்று பெயர் வைத்தால்' அந்தப்படத்துக்கு நிறையச்சிக்கல் வரும் அல்லது அசம்பாவிதங்கள் நடக்கும் என்பதால் அந்தப்பெயர் வேண்டாம் என்று நினைக்கிறார்களாம்.

கண்ணபிரான் என்பது ஏற்கெனவே இயக்குநர் அமீர் பதிவு செய்து வைத்திருக்கும் தலைப்பு. பருத்தி வீரனுக்குப் பிறகு அவர் இயக்கவிருந்த படத்துக்கு இந்தத் தலைப்பைப் பதிவு செய்து வைத்தார். ஆனால் அந்தப் படம் தொடங்கப்படவே இல்லை. லிங்கா தலைப்பும் அமீர் பதிவு செய்து வைத்திருந்ததுதான் என்பது குறிப்பிடத்தக்கது.
 
இன்னும் ஒரிரு நாட்களில் இது உண்மையா இல்லையா என்பது தெரிந்துவிடுமென்றும் கூறப்படுகிறது.

Comments