விவேக்குடன் கூட்டணி வைத்த உதயநிதி!!!

25th of August 2015
சென்னை:தொடர்ந்து தனது மூன்று படங்களில் சந்தானத்துடனும் தற்போது நடித்துவரும் ‘கெத்து’ படத்தில் கருணாகரனுடன் காமெடிக்கூட்டணி அமைத்த உதயநிதி, தனது அடுத்த படத்தில் விவேக்குடன் முதன்முறையாக கூட்டணி சேர்கிறார். ‘என்றென்றும் புன்னகை’ படத்தை தொடர்ந்து இயக்குனர் அஹமது இந்தப்படத்தை இயக்கவுள்ளார்.

இந்தப்படம் இந்தியில் வெளியாகி சூப்பர்ஹிட்டான ‘ஜாலி எல்எல்பி’ என்கிற படத்தின் ரீமேக் ஆகும்.. இந்தப் படத்தின் கதை முற்றிலும் நீதிமன்ற பின்னணியில் நடப்பது தான். ஆறு அப்பாவி தொழிலாளர்களின் நலனுக்காக வாதாடும் வழக்கறிஞர் கதாபாத்திரத்தில் உதயநிதி நடிக்க இருக்கிறார்.
 
இந்தியிலிருந்து தமிழுக்கு மாற்றுவதால் நம்ம ஊருக்கு ஏற்ப சில மாற்றங்களை செய்துள்ளார்களாம். இந்தப்படத்தின் கதாநாயகியாக மீண்டும் உதயநிதியுடன் இணைந்து ஹன்சிகா நடிக்கிறார். மேலும் இந்தப்படத்தில் பிரகாஷ்ராஜ், ராதாரவி, ‘ஆரம்பம்’ புகழ் அக்சரா ஆகியோர் நடிக்கின்றனர்.

Comments