கபாலிக்கு சொந்தக்காராங்க இல்லை!!!

23nd of August 2015
சென்னை:ரஜினி படத்துக்கு கபாலி என்று பெயர் வைத்ததும், அந்தப் பெயரில் படம் தயாரிச்சுகிட்டிருக்கேன் என்று மைசூரிலிருந்து சிவகுமார் என்பவர் வந்து குதித்தார்.
 
கபாலி இவர் பதிவு செய்த பெயர்தான். ஆனால், பெயரை புதுப்பிக்காததால் அது காலாவதியாகிவிட்டது. கபாலி என்று யாராவது பெயர் வைத்திருக்கிறார்களா என தாணு தேடிய போது இல்லை என்று பதில் வந்துள்ளது. சிவகுமார் பெயரை புதுப்பிக்காததுதான் மொத்தப் பிரச்சனைக்கும் காரணம்.

இதுபற்றி தாணு பதிலளித்துள்ளார்

எங்கள் படத்துக்கு கபாலி என்று பெயர் வைக்க முடிவு செய்ததும், இந்த பெயரில் வேறு யாராவது பதிவு செய்து இருக்கிறார்களா என்று பார்த்தோம் ‘இல்லை’ என்பதை உறுதி செய்த பிறகு தான் ‘கபாலி’ என்று பெயர் வைப்பதை அறிவித்தோம்.

பின்னர்தான் எங்களுக்கு இப்படி ஒரு படம் இருப்பது தெரியவந்தது. அந்த படம் சம்பந்தப்பட்டவர்கள் யாரும் எங்களை தொடர்ப்பு கொள்ளவில்லை. அந்த தலைப்பை அவர்கள் புதுப்பிக்காததால்தான் பிரச்சினை ஏற்பட்டு இருக்கிறது.

எங்கள் பக்கம் தவறு இல்லை. என்றாலும் விரைவில் இந்த பிரச்சினையை சரி செய்து விடுவோம்" என்று கூறினார்.

Comments