ராணுவ வீரர்களின் பாதுகாப்பில் விக்ரம் பிரபு பட ஷூட்டிங்!!!

15th of August 2015
சென்னை:ஜி.என்.ஆர்.குமரவேலன் டைரக்சனில் ஆக்‌ஷன் ரொமாண்டிக் த்ரில்லராக உருவாகிவரும் ‘வாகா’ படத்தில் ராணுவ அதிகரியாக நடிக்கிறார் விக்ரம் பிரபு. இந்தப்படத்தில் ராணுவ அதிகாரியின் காதலைப்பற்றி சொல்கிறாராம் குமரவேலன். இந்தப்படத்தில் விக்ரம் பிரபுவுக்கு ஜோடியாக நடிக்கிறார் ரன்யா.
 
இந்தப்படத்தின் முதல் ஷெட்யூலை காரைக்குடியிலும் இரண்டாவது ஷெட்யூலை ஊட்டியிலும் நடத்தி முடித்து விட்டு, மூன்றாவது ஷெட்யூலுக்காக காஷ்மீரில் முகாமிட்டு படப்படிப்பு நடத்தி வருகிறார்கள்.
 
காஷ்மீரின் நெரிசலான தெருக்களிலும், எல்லையை ஒட்டியுள்ள பகுதிகளிலும் கூட படப்பிடிப்பை நடத்தி வருகிறார்கள்.
படப்பிடிப்பு குழுவினரின் பாதுகாப்புக்கு எப்போதும் 50 ராணுவ வீரர்கள் சுற்றி நின்றபடி இருப்பதால் பயமின்றி காட்சிகளை படமாக்கி வருகிறார்களாம். படப்பிடிப்பு குழுவினர் எந்த ஏரியாவுக்கு சென்றாலும் காஷ்மீர் மக்கள் அவர்களை அன்புடன் சாயா கொடுத்து உபசரிக்கிறார்களாம்..

Comments