ஸ்டார் ஹோட்டல் கிச்சனில் எதிரிகளுடன் மோதிய கமல்!!!

14th of August 2015
சென்னை:தனது உதவியாளர் ராஜேஸ் இயக்கத்தில் கமல் நடித்துள்ள தூங்காவனம் படப்பிடிப்பை நிறைவு செய்து பூசணிக்காயும் உடைத்துவிட்டார்கள். கமர்ஷியலாக உருவாகியுள்ள இந்தப்படத்தில் ஆக்சனுக்கு பஞ்சம் இல்லை என்கிறார்கள்.. அதை நிரூபிக்கும் விதமாக ஸ்டார் ஹோட்டல் கிச்சன் போல பிரமாண்ட செட் ஒன்றை அமைத்து கமல் எதிரிகளுடன் மோதும் காட்சிகளை படமாக்கியுள்ளார்கள்..

அதிசயத்திலும் அதிசயமாக அன்றைய தினம் ஸ்ருதிஹாசனுக்கு விடுமுறை என்பதால் தனது தந்தையை பார்க்க ‘தூங்காவனம்’ ஸ்பாட்டிற்கு வந்த ஸ்ருதிஹாசன் சண்டைக்காட்சி படமாக்கப்பட்ட விதத்தை பார்த்து பிர்மித்துவிட்டாராம். ரொம்பநேரம் அங்கிருந்து ஸ்பாட்டில் இருந்த த்ரிஷாவுடன் கலகலப்பாக பேசிவிட்டுத்தான் கிளம்பினாராம் ஸ்ருதிஹாசன்.

Comments