4th of August 2015
சென்னை:5. பஜ்ரங்கி பைஜான் :சல்மான் கானின் இந்த இந்திப் படம் சென்ற வார இறுதியில் 12.70 லட்சங்களை
வசூலித்து ஐந்தாவது இடத்தில் உள்ளது. இதுவரை அதன் சென்னை வசூல் 1.17 கோடி.
4. ஆரஞ்சு மிட்டாய்
விமர்சகர்கள் பாராட்டினாலும் ஆரஞ்சு மிட்டாயின் வசூல் மிக மோசமாகவே
உள்ளது. சென்ற வெள்ளிக்கிழமை வெளியான படம் முதல் மூன்று தினங்களில் 18
லட்சங்களை மட்டுமே வசூலித்துள்ளது.
3. இது என்ன மாயம்
விஜய் இயக்கத்தில் விக்ரம் பிரபு நடித்திருக்கும் இந்தப் படம் சென்ற வாரம்
வெளியானது. முதல் மூன்று தினங்களில் சென்னையில் இதன் வசூல் 22.61 லட்சங்கள்
மட்டுமே...
'பாபநாசம்' திரைப்படத்திற்கு பின்னர் பல புதிய திரைப்படங்கள் ரிலீஸானபோதிலும் இன்னும் ஐந்தாவது வாரமாக வெற்றிகரமாக இந்த
படம் தமிழகம் முழுவதிலும் ஓடிக்கொண்டிருக்கின்றது. சமீபத்தில் வெளிவந்த கமல்
படங்களில் சத்தமில்லாமல் மிகப்பெரிய வெற்றியை பெற்ற படம் இது என்பது
குறிப்பிடத்தக்கது.
ரூ. 500 கோடி வசூலை எட்டிய பாகுபலி! ஆச்சரிய விவரங்கள்!
தெலுங்கு, தமிழ், மலையாளம், ஹிந்தி ஆகிய மொழிகளில் உருவான பாகுபலி படத்தில் பிரபாஸ், ராணா டகுபதி, அனுஷ்கா, தமன்னா ஆகியோர் நடித்துள்ளார்கள். ராஜமெளலி இயக்கியுள்ளார். வசூலில் நாளுக்கு நாள் ஆச்சரியப்படுத்தும் இந்தப் படம், இப்போது இரு புதிய சாதனைகளைச் செய்துள்ளது.
முதல் 2 நாள்களில் 100 கோடி வசூலைத் தொட்டு தனது சாதனையை ஆரம்பித்த பாகுபலி, அடுத்ததாக 5 நாள்களில், 200 கோடி ரூபாய் வசூலை அள்ளிய முதல் படம் என்கிற அடுத்தச் சாதனையை நிகழ்த்தியது. அதன்பின்னர், முதல் 10 நாளில் 355 கோடி ரூபாயை வசூலித்த படம் என்கிற நம்பமுடியாத சாதனையையும் செய்தது. அதுவரை எந்த ஒரு இந்திய சினிமாவும் முதல் 10 நாள்களில் 350 கோடி ரூபாய் வசூலைத் தாண்டியதில்லை. இதற்கு முன்பு அமீர் கானின் பிகே படத்துக்கு, 300 கோடியைத் தொட 17 நாள்கள் ஆயின.
இப்போது புதிதாக இரு சாதனைகள்.
ஹிந்தியில் டப் செய்யப்பட்ட பாகுபலி, யாரும் எதிர்பார்க்காத வசூலைப் பெற்றுள்ளது. முதல் 5 நாளில் ரூ. 35 கோடியைத் தொட்டபோது 100 கோடி வசூலைப் பெறுமா என்கிற கேள்வி எழுந்தது. அது இப்போது உண்மையிலேயே சாத்தியமாகியுள்ளது.
ஹிந்தியில் டப் செய்யப்பட்ட படங்களில் அதிக வசூலான படம் என்கிற புதிய சாதனையைப் படைத்துள்ளது பாகுபலி. இதற்கு முன்னர் எந்திரன் தான் இந்தப் பிரிவில் முதலிடத்தில் இருந்தது. ஞாயிற்றுக்கிழமை கிடைத்த வசூலோடு இதுவரை ஹிந்தி பாகுபலி மட்டும் ரூ. 100 கோடி வசூல் செய்துள்ளது. இதன் இன்னொரு சாதனைதான் உச்சபட்சம்!
Comments
Post a Comment