அசின் - ராகுல் காதலுக்கு நான்தான் காரணமா? நடிகர் அக்‌ஷய் குமார் பதில்!!!

12th of August 2015
சென்னை:மைக்ரோமேக்ஸ் செல்போன் நிறுவனத்தின் இணை நிறுவனர் ராகுல் சர்மாவும் (36) அசினும் (29) கடந்த சில வருடங்களாக காதலித்து வருகிறார்கள். இதனையடுத்து விரைவில் திருமணம் செய்ய இருவரும் முடிவெடுத்துள்ளார்கள்.

இதுதொடர்பாக ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு அசின் பேட்டியளித்தபோது கூறியதாவது: என்னுடைய எல்லா சினிமா வேலைகளையும் முடித்துக்கொண்டு வருகிறேன். அப்போதுதான் என்னால் என் சொந்த வாழ்க்கைக்கு நேரம் ஒதுக்கமுடியும். கடந்த இரண்டு வருடங்களாக புதுப்படங்களில் நடிக்க ஒப்புக்கொள்வதில்லை என்றார்.

இந்நிலையில், அசினுக்கு ராகுல் சர்மாவை நான் தான் அறிமுகம் செய்துவைத்தேன் என்று கூறியுள்ளார் பிரபல பாலிவுட் நடிகர் அக்‌ஷய் குமார்.

அசின் - ராகுல் காதலுக்கு நீங்கள்தான் காரணமா? இருவரையும் நீங்கள்தான் சேர்த்துவைத்தீர்களா என்று அக்‌ஷய் குமாரிடம் கேட்டதற்கு, ஆமாம், நான்தான் அறிமுகம் செய்துவைத்தேன். ஆனால் ஜோடிகளைச் சேர்த்துவைக்கும் நிறுவனம் எதுவும் ஆரம்பிக்கவில்லை என்றார் வேடிக்கையாக.

அபிஷேக் பச்சன், ரிஷி கபூர் ஆகியோருடன் அசின் நடித்துள்ள ஆல் ஈஸ் வெல் படம் ஆகஸ்ட் 21-ம் தேதி வெளிவருகிறது.

Comments