30th of August 2015
சென்னை:கேரளாவில் மலையாள நடிகர்களுக்கு எந்தளவிற்கு மவுசு இருக்கிறதோ அதே அளவு விஜய்க்கும் இருப்பது வியக்கதக்க விஷயம் என்றாலும் அதுதான் உண்மை. இந்த உண்மையை மேலும் உறுதிப்படுத்தியுள்ளது சமீபத்திய நிகழ்வு ஒன்று.
ஓணம் பண்டிகை
கேரளாவில் வெகு விமர்சையாக
கொண்டாடுவார்கள். இந்த பண்டிகையை 4 நாட்கள் கேரளாவில் கொண்டாடுவார்கள்.
இந்த நான்கு நாட்களில் தங்களுடைய டிஆர்பியை அதிகரித்து கொள்ள வேண்டும்
என்று மலையாள சேனல்கள் அனைத்த முன்னிடியடித்து கொண்டு முன்னணி நடிகர்களின்
படங்கள், நிகழ்ச்சிகளை ஒளிபரப்புவார்கள்.
அந்த வகையில் விஜய்யின் மெகா ஹிட்
படங்களான துப்பாக்கி’ படமும் இன்னொரு சேனலில் விஜய்யின் கத்தி’ படமும் ஒரே
நேரத்தில் ஒளிபரப்பினர். அந்த அளவுக்கு கேரள சேனல்கள் விஜய்யின்
படங்களையும் நிகழ்வுகளையும் ஒளிபரப்பினால் டி.ஆர்.பி ரேட்டிங் அதிகமாவதை
நன்றாகவே கணித்து வைத்திருக்கின்றன.
இது மட்டுமின்றி தமிழ் திரைரசிகர்களின்
ஒட்டு மொத்த எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியுள்ள விஜய்யின் புலி பட ஆடியோ
வெளியீட்டு விழாவையும் மலையாள சேனலில் ஒளிப்பரப்பியுள்ளனர். கேரள
ரசிகர்களுக்கு தனது பேஸ்புக் பக்கத்தில் ஓணம் பண்டிகை நல்வாழ்த்துக்களை
தெரிவித்துள்ளார். அதுவும் மலையாள மொழியிலே.
Comments
Post a Comment