2nd of August 2015
சென்னை:விஷ்ணுவர்தன் இயக்கத்தில் ஆர்யா, கிருஷ்ணா, தீபா சன்னிதி, சுவாதி நடித்துள்ள யட்சன் திரைப்படம் தணிக்கையில் யு சான்றிதழ் பெற்றுள்ளது.
சென்னை:விஷ்ணுவர்தன் இயக்கத்தில் ஆர்யா, கிருஷ்ணா, தீபா சன்னிதி, சுவாதி நடித்துள்ள யட்சன் திரைப்படம் தணிக்கையில் யு சான்றிதழ் பெற்றுள்ளது.
யுடிவியும், விஷ்ணுவர்தனும் இணைந்து யட்சன் படத்தை தயாரித்துள்ளனர்.
இரண்டு இளம் நடிகர்கள் இருந்தும் படத்தில் புகைபிடிக்ககும், மது அருந்தும்
காட்சிகள் கிடையாது. அதனால், வழக்கமாக படங்களில் இடம்பெறும் மது, புகை
எச்சரிக்கை வாசகம் யட்சனில் இடம்பெறாது என்று யுடிவி தனஞ்செயன்
கூறியிருந்தார்.
இந்நிலையில் படம் தணிக்கைக்குழுவுக்கு திரையிட்டு காண்பிக்கப்பட்டது.
படத்தைப் பார்த்தவர்கள் அனைவரும் பார்க்கத் தகுந்த யு சான்றிதழ்
அளித்துள்ளனர்.
Comments
Post a Comment