இனி நோ பார்ட்டி : விஷால் முடிவு!!!

28th of August 2015
சென்னை:சமீபகாலமாக ஒரு அரசியல்வாதியைப் போல நடந்துக்கொள்ளும் நடிகர் விஷால், அடிக்கடி சில பல அறிவிப்புகளை அவிழ்த்து விடுகிறார்.

ஏழை மாணவர்களுக்கு கல்வி உதவி, ஏழை எளியோருக்கு உதவி என்று சமூக பணியில் இறங்கியுள்ள விஷால், நடிகர் சங்க தேர்தலிலும் தலைவர் பதவிக்கு போட்டியிடுகிறார்.

இந்த நிலையில், நடிகர் விஷால்  இன்று (ஆக.28)  பிறந்த நாள் கொண்டாடுகிறார். இந்த பிறந்த நாளில், அவர் ஒரு சபதம் எடுத்துள்ளார். அதன்படி, இனி பிறந்தநாளை முன்னிட்டு பார்ட்டி உள்ளிட்ட விஷயங்களில் ஈடுபட மாட்டாராம். அதற்கு பதிலாக, அரசு பள்ளிகளுக்கு சென்று மாணவர்களை சந்திப்பது, ஏழை பள்ளி மாணவர்களுக்கு உதவி செய்வது, ரசிகர்களுடன் பிறந்தநாள் கொண்டாடுவது, என்று தனது பிறந்தநாளை கொண்டாடப் போகிறாராம்.

Comments