28th of August 2015
சென்னை:கவர்ச்சியின் உச்சமாக திகழ்ந்த நடிகை சன்னி லியோனியை, சமீபத்திய கவர்ச்சி பரபரப்பாக திகழும் ராதிகா ஆப்தே ஓரம் கட்டியுள்ளார்.
நீளப் படங்களில் நடித்து, பிறகு பாலிவுட் சினிமாவுக்குள் நுழைந்த சன்னி
லியோன், தற்போது தனது கவர்ச்சியின் மூலம் மும்பை சினிமாவையே ஒரு ரவுண்ட்
வந்துக்கொண்டிருக்க, தற்போது அவரை ஓரம் கட்டும் அளவுக்கு ராதிகா ஆப்தே
உருவெடுத்துள்ளார்.
எதார்த்தமான நடிப்பு, குணச்சித்திர வேடம் என்று இருந்த ராதிகா ஆப்தே,
ஆங்கிலப் படம் ஒன்றில் கவர்ச்சியாக நடித்து பரபரப்பை ஏற்படுத்தினார்.
மேலும், தெலுங்கு நடிகர்களுடன் மோதல், என்று ஆக்ஷன் பக்கமும் தனது
பங்களிப்பைக் கொடுத்தவர், 'அஹல்யா' என்ற குறும்படம் மூலம் தனது கவர்ச்சியை
மேலும் கட்டவிழ்த்து விட்டார்.
இதற்கிடையில், 'கபாலி' படத்தில் ரஜினிக்கு ஜோடியாக ஒப்பந்தம் செய்யப்பட்டவுடன், அவருடைய மவுசு மேலும் கூடியது.
இந்த நிலையில், இந்தியாவில் கூகுளில் அதிகமாக தேடப்பட்டு வந்த
நடிகைகளின் பட்டியலிலும் ராதிகா ஆப்தே முதலிடம் பிடித்துள்ளார். முதலில்
இந்த இடத்தில் கவர்ச்சி அணு ஆயுதமாக இருந்த சன்னி லியோனி இருந்தார். ஆனால்,
தற்பொது அவரை ஓரம் கட்டி, அந்த இடத்தை தட்டி பறித்துள்ளார் ராதிகா ஆப்தே.
Comments
Post a Comment