இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மானை சந்தித்தார் சச்சின் டெண்டுல்கர்!!!

23nd of August 2015
சென்னை:சென்னைக்கு வந்திருந்த சச்சின் டெண்டுல்கர் இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மானை அவரது வீட்டிற்கு சென்று சந்தித்தார்.
 
மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின் டெண்டுல்கர் சென்னையில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக வந்திருந்தார். அப்போது, அவர் கோடம்பாக்கத்தில் உள்ள இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானை அவரது இல்லத்திற்கு சென்று சந்தித்தார்.

ஏ.ஆர்.ரகுமானும், சச்சின் டெண்டுல்கரும் இசையமைப்பது குறித்து நீண்ட நேரம் உரையாடினார்கள். பிறகு, ஏ.ஆர்.ரகுமான், சச்சினுக்கு இசையமைப்பது எப்படி என்று சொல்லிக் கொடுத்தார். மேலும், சில டியூன்களையும் அவர் போட்டுக் காண்பித்தார்.

சந்திப்பை முடித்துக்கொண்டு தெண்டுல்கர் கூறுகையில், ’நான் ஏ.ஆர்.ரகுமானின் தீவிர ரசிகர். மரியாதை நிமித்தமாக அவரை சந்தித்தேன்’ என்றார். பின்னர் தெண்டுல்கர் சென்னையில் கிரிக்கெட் பயிற்சி மைதானத்துக்கு சென்று வீரர்களுக்கு விளையாட்டு நுணுக்கங்களையும் சொல்லிக் கொடுத்தார்.

Comments