எம்.எஸ்.வியின் திருவுருவப்படத்தை திறந்து வைக்கிறார் இசைஞானி!!!

2nd of August 2015
சென்னை:மறைந்த இசை சக்கரவர்த்தி மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதனின் புகழ்பாடும் விதமாக சமீபத்தில் தான் இசைக்கச்சேரி ஒன்றை நடத்தினார் இசைஞானி இளையராஜா. அடுத்ததாக வடபழனியில் அமைந்துள்ள திரைப்பட இசைக்கலைஞர்கள் சங்க கலையரங்கத்தில் திரைப்பட இசைக்கலைஞர்கள் சார்பாக எம்.எஸ்.விக்கு நினைவாஞ்சலி கூட்டம் நடைபெற இருக்கிறது.

இந்தக்கூட்டத்தில் இசைஞானி இளையராஜா கலந்துகொண்டு, எம்.எஸ்.வியின் திருவுருவப்படத்தை திறந்துவைக்க இருக்கிறார். இந்த நிகழ்வில் அனைத்து இசை அமைப்பாளர்களும்,பிரபல பாடக, பாடகியரும், இசை கலைஞர்களும் இதில் பங்கேற்கிறார்கள்.
 
மேலும் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம், தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனம் , தமிழ்த்திரைப்பட இயக்குனர்கள் சங்கத்தின் நிர்வாகிகளும், மற்றும் அனைத்து தொழிலாளர் சங்கங்களின் நிர்வாகிகளும் இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார்கள்.

Comments