நடிகர் சாந்தனு - கீர்த்தி திருமணம் : சினிமா பிரபலங்கள் பங்கேற்பு!!!

22nd of August 2015
சென்னை:இயக்குனரும் நடிகருமான பாக்யராஜ் - நடிகை பூர்ணிமா தம்பதியின் மகனும், நடிகருமான சாந்தனுவுக்கும், டேன்ஸ் மாஸ்டர் கலாவின் அக்கா மகளும், டி.வி தொகுப்பாளினியான கீர்த்தியும் ஒருவரை ஒருவர் காதலித்து வந்தனர். இவர்களுடைய காதலுக்கு இரு வீட்டாரும் பச்சை கோடி, காட்ட சில மாதங்களுக்கு முன்பு இருவருக்கும் நிச்சயதார்த்தம் நடந்தது.
 
இந்நிலையில், இவர்களது திருமணம் நேற்று சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள இஸ்கான் கோவிலில் மிகவும் விமரிசையாக நடைபெற்றது. இவர்களது திருமணத்தில் இருவரது குடும்பத்தாரும், தமிழ் திரையுலக பிரபலங்கள் பலரும் நேரில் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினர்.
 
நடிகர் விஜய், இவ்விழாவிற்கு காலையிலேயே வருகை தந்து, தாலி கட்டும் வரை கூடவே இருந்து மணமக்களை ஆசீர்வதித்துவிட்டு சென்றார். மேலும், சரத்குமார், ராதிகா சரத்குமார், பிரபு, ராதாரவி, மணிரத்னம், சுஹாசினி, குஷ்பூ, விஷால், தெலுங்கு நடிகர் வெங்கடேஷ், இயக்குனர்கள் தரணி, ஹரி, காமெடி நடிகர் சூரி, கார்த்தி, ஜோதிகா, ரேவதி, சுகன்யா, நகுல், சங்கர் கணேஷ், ஆர்.சுந்தர்ராஜன், விக்ராந்த் உள்ளிட்ட சினிமா பிரபலங்கள் கலந்துகொண்டு மணமக்களை ஆசீர்வதித்தனர்.
 
திருமணத்திற்கு வருகை தந்த அனைவரையும் இயக்குனர் பாக்யராஜின் சிஷ்யர்களான இயக்குனர்கள் பார்த்திபன்-பாண்டியராஜன் இருவரும் வாசலில் நின்று வரவேற்றனர்.

Comments