ரஜினி, கமலை சந்தித்த பாண்டவர் அணி!!!

18th of August 2015
சென்னை:சரத்குமார் அணிக்கு எதிராக விஷால் அணியினர் களம் இறங்குவது உறுதியாகிவிட்டதால், தேர்தல் வேளைகளில் அந்த அணி பம்பரமாக சுழன்று ஈடுபட்டு வருகிறது. விஷால், கார்த்தி, கருணாஸ், நாசர், பொன்வண்ணன் என்கிற ஐந்து பேரை மையமாக வைத்து இயங்கும் இந்த அணிக்கு ‘பாண்டவர் அணி’ என பெயர் சூட்டப்பட்டுள்ளது.

இன்னும் சொல்லப்போனால் பாரதப்போரில் அதர்மத்தை வென்று தர்மத்தை நிலைநாட்டியவர்கள் பாண்டவர்கள் என்பதால் தங்கள் அணிக்கு இந்த பெயர் பொருத்தமானது என விஷால் அணியினர் கருதுகிறார்கள்.
இதுவரை ஓரளவு தீவிரமாக போய்க்கொண்டிருந்த பிரச்சாரம், இன்று ஒரே நாளில் ரஜினி, கமல், குஷ்பு ஆகியோரை சந்தித்து இந்த அணி ஆதரவு கேட்டதால் விறுவிறுப்பான நிலையை எட்டியுள்ளது. ரஜினி, கமல் ஆதரவு யாருக்கு என்று தெரியாவிட்டாலும், இவர்கள் இருவரின் தவிர்க்கமுடியாத நண்பர்கள் பட்டியலில் பத்து நபர்களில் ஒருவராக நாசர் இருப்பதால் ‘பாண்டவர் அணி’க்கு இவர்கள் ஊக்கம் கொடுக்க வாய்ப்பு இருப்பதாக பேசிக்கொள்கிறார்கள்.

Comments