6th of August 2015
சென்னை:நிச்சயிக்கப்பட்ட திருமணம் நின்ற உடன் மவுனம் காத்து வந்த திரிஷா,
தற்போது தனது பேட்டிகளில், திருமணம் குறித்து அதிரடியான கருத்துக்களை
தெரிவித்து வருகிறார்.
அதன்படி, சமீபத்தில் திரிஷா கொடுத்த பேட்டி ஒன்றில், திருமணம்
செய்துக்கொள்வதைக் காட்டிலும், திருமணம் செய்யாமல் சேர்ந்து வாழும் முறை
நல்லது, என்று தெரிவித்துள்ளார்.
இது குறித்து திரிஷா மேலும் கூறுகையில், "லிவ் இன் உறவு என்பது
ஒவ்வொருவரின் தனிப்பட்ட விருப்பம். சம்பந்தப்பட்ட இரண்டு பேருக்கும்
அவர்களின் குடும்பத்துக்கும் லிவ் இன் உறவு சரி என்று தோன்றினால், பிறகு
அதில் வேறு எந்தப் பிரச்னையும் இருக்கக்கூடாது. திருமணம் செய்து,
கருத்துவேறுபாடுகளால் விவாகரத்து பெறுவதைக் காட்டிலும் லிவ் இன் உறவில்
இருந்து பிரிவது மேலானது என எண்ணுகிறேன்." என்று தெரிவித்துள்ளார்.
Comments
Post a Comment