14th of August 2015
சென்னைஜெயம் ரவி நடிப்பில் சகலகலா வல்லவன் படம் வெளியாகி இரண்டு வாரங்கள் ஆகியும் சற்றும் கூட்டம் குறையாமல் ஓடிக்கொண்டு இருக்கிறது.. ஜெயம் ரவி, சூரி இருவரும் காமெடியில் ஏறி அடித்திருப்பதும், அஞ்சலி கவர்ச்சியில் இறங்கி அடித்திருப்பதும் படத்திற்கு ப்ளஸ் பாயிண்ட்டாக அமைந்துவிட்டது.
குறிப்பாக பி&சி ரசிகர்களுக்கு ஏற்ற மாதிரி சுராஜ் கமர்ஷியல் மசாலாவாக படத்தை தந்திருந்தார். அதனால் வார விடுமுறை நாட்களில் கூட்டம் அதிகரிக்கவே, படம் ஓடும் சில தியேட்டர்களில் காட்சிகளின் எண்ணிக்கையை அதிகரித்துள்ளார்ர்கள்.
Comments
Post a Comment