தர்மதுரை லுக்கிற்கு மாறிய ரஜினி!!!

30th of August 2015
சென்னை:ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடிக்கவுள்ள ‘கபாலி’ படத்தில் வழக்கமான ரஜினியை பார்க்கமுடியாது என்பது முன்கூட்டியே உறுதியாகிவிட்டது.. அதுமட்டுமல்ல, கபாலி படத்தின் போட்டோஷூட் நடைபெற்ற, அன்றைய தினம் மாலையே சாந்தனுவின் திருமண வரவேற்பில் வெள்ளை தாடியுடன் கலந்துகொண்டார் ரஜினி.

அதனால் நிச்சயம் அவரது கேரக்டர் வெள்ளை தாடியுடன் தான் இருக்கும் என்பது அப்போதே உறுதியானது. அதை மெய்ப்பிக்கும் விதமாக ரஜினிக்காக நடத்தப்பட்ட போட்டோஷூட்டின்போது எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்று இன்று வெளியாகி ரஜினியின் புதிய லுக்கை காட்டிக்கொடுத்துள்ளது..
 
ரஜினியின் வெள்ளை தாடியும், சால்ட் அன்ட் பெப்பர் லுக்கும் கிட்டத்தட்ட 25 வருடங்களுக்கு முன் ‘தர்மதுரை’ படத்தில் வயதான ரஜினியின் கேரக்டர் லுக்கிலேயே இருந்தது போலவே இருக்கிறது.. படத்தில் ரஜினிக்கு இந்த ஒரு கெட்டப் மட்டும் தானா, இன்னும் இளமையான கெட்டப் ஏதேனும் இருக்கிறதா என்பது ரஞ்சித்தும் ரஜினியும் மட்டுமே அறிந்த ரகசியங்கள். 

Comments