3rd of August 2015
சென்னை:இப்படத்தின் பிரமாண்ட இசை வெளியீடு இன்று மகாபலிபுரத்தில் நடைபெற்றது. இவ்விழாவில் முதல் ஆளாக வந்திருந்த விஜய் அனைவரையும் அன்புடன் வரவேற்றார்.
விழாவில் பலரும் விஜய்யை வாழ்த்தி பேசியபோதும் டி.ஆரின் பேச்சுதான் அனைவரையும் கவர்ந்தது.
விழாவில் டி.ராஜேந்தர் பேசும்போது,
‘‘விஜய் ஒரு உண்மையான தமிழன். என்னுடைய மகன் சிம்பு வேறொரு நடிகரின் ரசிகன் என்று தெரிந்தும் தனது சகோதரனாக நினைத்து அவனுடைய படம் வெளிவர உதவி செய்துள்ளார்.
அவரது உதவியை நான் எப்போதும் மறக்கமாட்டேன். தம்பி விஜய் உன்னிடம் இல்லை தலைக்கணம். நீ பேசமாட்ட வசனங்கள் கத்தி, நீ நடிச்ச படம் பேரு கத்தி, இதுக்குத்தான் ரசிகர்கள் இருக்காங்க உன்ன சுத்தி’’ என தனது வழக்கமான பஞ்ச் டயலாக்குகளை வரிசையாக பேசத் தொடங்கினார்.
இவற்றையெல்லாம் மேடைக்கு கீழே அமர்ந்து இருந்த விஜய் பொறுமையுடன் கேட்டுக் கொண்டிருந்தார். ஒருகட்டத்தில் டி.ராஜேந்தரின் வசனங்களில் அனல் பறக்கவே, விஜய்யால் அங்கு உட்கார முடியவில்லை.
நேராக மேடையேறி சென்று டி.ராஜேந்தரை கட்டி அணைத்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். பின்னர் அவருக்கு சால்வை போர்த்தி மரியாதை செலுத்தினார். இருப்பினும், டி.ராஜேந்தர் தொடர்ந்து விஜய்யை பற்றி புகழ்ந்து பேசிக்கொண்டே இருந்தார்.
அவரது பேச்சு சுமார் 15 நிமிடங்கள் வரை நீடித்தது. அவரது ஒவ்வொரு பஞ்ச் வசனங்களுக்கும் ரசிகர்கள் விசில் அடித்தும், ஆரவாரம் செய்து தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
அமைதியாக பார்த்துக்கொண்டிருந்த விஜய் ஒரு கட்டத்துக்கு மேல் மேடையேறி ராஜேந்தரை கட்டியணைத்து கண்கலங்கி தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.
Comments
Post a Comment