இரண்டு வாரங்களில் பிரசன்னாவுக்கு புரமோஷன்!!!

4th of August 2015
சென்னை:ஃபைவ் ஸ்டார்' என்ற படத்தில் அறிமுகமாகி அதன் பின்னர் அழகிய தீயே, அஞ்சாதே, சென்னையில் ஓர் நாள், புலிவால் போன்ற பல படங்களில் நடித்த நடிகர் பிரசன்னா, தற்போது மெட்ராஸ்' புகழ் கலையரசனுடன் இணைந்து ஒரு படத்தில் நடித்து வருகிறார். இன்னும் பெயர் வைக்கப்பட இந்த படத்தின் வசனக்காட்சிகளின் படப்பிடிப்புகள் முடிவடைந்துவிட்டதாகவும், இன்னும் பாடல் காட்சிகளின் படப்பிடிப்பு மட்டுமே மீதியிருப்பதாகவும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்..

பிரசன்னா, கலையரசன் ஆகிய இருவரும் மதுரையை சேர்ந்த கிராமம் ஒன்றில் வாழும் இரண்டு இளைஞர்கள் கேரக்டரில் நடித்துள்ளனர். நட்பாக இருக்கும் இருவரும் ஒரு பிரச்சனையால் பிரிவதும் அதன்பின்னர் என்ன ஆனது என்பது தான் கதை என்று கூறப்படுகிறது. இந்த படத்தில் பிரசன்னாவுக்கு ஸ்ருஷ்டி டாங்கே மற்றும் கலையரசனுக்கு தன்ஷிகா ஜோடியாக நடித்து வருகின்றனர். முதல்முறையாக மதுரை தமிழில் பேசி நடித்தது வித்தியாசமான அதே நேரத்தில் மகிழ்ச்சியான அனுபவமாக இருந்தது என பிரசன்னா கூறியுள்ளார்/.

இந்நிலையில் பிரசன்னாவின் மனைவியும் பிரபல நடிகையுமான சினேகா, தற்போது ஒன்பது மாத கர்ப்பிணியாக இருப்பதாகவும், இன்னும் இரண்டு வாரங்களில் குழந்தை பிறந்துவிடும் என மருத்துவர்கள் கூறியுள்ளதால் எங்கள் குடும்பத்தில் வரவிருக்கும் புதிய உறவை வரவேற்க நாங்கள் த்ரிலிங்குடன் தயாராக இருப்பதாகவும் பிரசன்னா கூறியுள்ளார். இன்னும் இரண்டு வாரங்களில் அப்பாவாக புரமோஷன் ஆகவுள்ள நடிகர் பிரசாந்துக்கு நமது அட்வான்ஸ் வாழ்த்துக்கள்

Comments