நடனம், நடிப்பு மற்றும் இயக்கம் என தனது ஒவ்வொரு அசைவிலும் வெற்றியைக் கண்டு வரும் பிரபு தேவா தயாரிப்பாளர் ஆகிறார்!
1st of August 2015
சென்னை:நடனம், நடிப்பு மற்றும் இயக்கம் என தனது ஒவ்வொரு அசைவிலும் வெற்றியைக்
கண்டு வரும் பிரபு தேவா தயாரிப்பாளராக உருவெடுக்க உள்ளார். தனது தயாரிப்பு
நிறுவனத்திற்கு ‘பிரபு தேவா ஸ்டுடியோ’ என பெயர் வைத்துள்ளார் பிரபு தேவா,
தனது நிறுவனம் மூலம் தான் தயாரிக்கும் முதல் 3 பாத்தின் அதிகாரப்பூர்வ
அறிவிப்பை வரும் ஆகஸ்ட் 3ஆம் தேதி அறிவிக்க உள்ளார்.
இது குறித்து பிரபுதேவா கூறுகையில், "சர்வதேச தரத்தில் கதையம்சம் உள்ள திரைப்படங்களை ‘பிரபு தேவா ஸ்டுடியோஸ்’ தயாரிக்க திட்டமிட்டுள்ளது. தமிழ் மட்டுமல்லாது மற்ற மொழி திரைப்படங்களையும் தயாரிக்க திட்டமிட்டு உள்ளோம். தமிழ் திரை உலகில் திறமைக்கு பஞ்சமே இல்லை. தேர்ந்த, அனுபவமுடைய பலரை கொண்டிருக்கிறது. திறன் வாய்ந்த

கலைஞர்கள்,படைப்பாளிகள் மொழி, ப்ராந்தியம் என குறுகிய
வட்டத்தில் சிக்கி கொள்ளக்கூடாது அவர்கள் நாடெங்கும் சென்று தங்களது
திறமையை வெளி காட்ட வேண்டும்.நல்ல படைப்பாளிகளை தேர்ந்து எடுத்து வெவ்வேறு
இடங்களுக்கு இட்டு செல்வதில் முனைப்பாக செயல்படும்."என்று தெரிவித்தார்.
Comments
Post a Comment