80-களின் நடிகர், நடிகைகள் 6-வது ஆண்டாக சந்திப்பு: இம்முறை ரஜினி பங்கேற்கவில்லை!!!

30th of August 2015
சென்னை:தொடர்ச்சியாக 6ம் ஆண்டாக 80-களின் நடிகர், நடிகைகளின் சந்திப்பு நடைபெற்றது. இந்தாண்டு ரஜினி பங்கேற்கவில்லை.
 
ஆறாவது ஆண்டாக 1980-களில் உள்ள நடிகர், நடிகைகள் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. ஒவ்வொரு ஆண்டும் ஒவ்வொரு முன்னணி நடிகர், நடிகைகள் இதற்கான பொறுப்பை ஏற்றுக் கொள்வார்கள். இந்தாண்டு சுஹாசினி, லிஸி மற்றும் குஷ்பு மூவரும் இணைந்து ஏற்பாடுகளை செய்திருந்தார்கள். சென்னை ஒலீவ் கடற்கரையில் உள்ள நீனா ரெட்டி கெஸ்ட் ஹவுஸில் ஆகஸ்ட் 29ம் தேதி இரவு நடைபெற்றது.

கடந்தாண்டு பீச் உடைகள் பாணியில் நடைபெற்ற சந்திப்பு, இந்தாண்டு முழுக்க சிவப்பு நிறத்திலான ஆடைகள் பாணியில் நடைபெற்றன. நடிகர், நடிகைகள் சந்தித்த இடமும் முழுக்க சிவப்பு நிறத்தால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது. இந்தாண்டு Moulin Rouge பாணி அனுசரிக்கப்பட்டது.
 
இந்தாண்டு சிறப்பு அழைப்பாளராக இந்தி நடிகர் ஜாக்கி ஷெராப், பூனம் தில்லான், ஸ்வப்னா, ஜெயசுதா, ரகுமான், பார்வதி, சத்யராஜ், பாக்யராஜ் ஆகியோர் முதல் முறையாக கலந்து கொண்டார்கள்.

Comments