4th of August 2015
சென்னை:'காஞ்சனா', 'காஞ்சனா-2' என தொடர்ந்து மாபெரும் வெற்றிப் படங்களைக்
கொடுத்த ராகவா லாரன்ஸ், தற்போது ‘மொட்ட சிவா கெட்ட சிவா’, ‘நாகா’ என 2
படங்களை இயக்கி, ஹீரோவாக நடிக்கிறார். இந்த இரண்டுப் படங்களையும் வேந்தர்
மூவிஸ் நிறுவனம் தயாரிக்கிறது.
இப்படத்த்ங்க்களின் அறிமுக விழா நேற்று சென்னையில் நடைபெற்றது. அப்போது,
வேந்தர் மூவிஸ் மதன், ராகவா லாரன்ஸுக்கு முன் பணமாக ரூ.1 கோடி கொடுத்தார்.
அந்த ஒரு கோடி பணத்தை, மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் பெயரில்
ஏழைக்குழந்தைகளின் கல்வி மற்றும் மரக்கன்றுகள் நடும் ‘பசுமை’ திட்டத்துக்கு
வழங்குவதாக நடிகர் ராகவா லாரன்ஸ் மேடையிலேயே அறிவித்தார்.
Comments
Post a Comment