VSOP Movie New Stills!!! 21ஆம் தேதி 'வி.எஸ்.ஒ.பி' படத்தின் சிங்கிள் டிராக் ரீலீஸ்!!!

18th of July 2015
சென்னை:Tags : VSOP New Movie Photos, VSOP Latest Movie Gallery, VSOP Unseen Movie Pictures, Vasuvum Saravananum Onna Padichavanga Film Latest images, VSOP Movie Hot Stills, Vasuvum Saravananum Onna Padichavanga Movie New Pics.
 
ஆர்யாவின் 'தி ஷோ பீப்பல்’ தயாரிக்கும் திரைப்படம் ‘வாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க’. சுறுக்கமாக 'வி.எஸ்.ஒ.பி' என்று சொல்லப்படும், இப்படத்தில் இயக்குனர் ராஜேஷ்.எம், ஆர்யா, சந்தானம் ஆகியோர் மீண்டும் இணைந்துள்ளனர். இதில் நாயகியாக தமன்னா நடிக்கிறார். மேலும் முக்தா பானு, வித்யுலேகா ஆகியோர் நடித்துள்ளனர். 

 
'பாஸ் என்கிற பாஸ்கரன்' படத்திற்கு பிறகு ஆர்யா, சந்தானம் மற்றும் ராஜேஷ் மூவரின் வெற்றி கூட்டணி மீண்டும் இப்படத்தில் இணைகிறார்கள். சமீபத்தில் வெளியான இப்படத்தின் டீசர் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.  
படப்பிடிப்பு முடியும் தருவாயில் உள்ள இப்படத்தில் ஒரு பாடல், வரும் ஜூலை 21ஆம் தேதி வெளியாக உள்ளது.
இது குறித்து இயக்குனர் ராஜேஷ் கூறுகையில், "காதல், ஃப்ரெண்ட்ஷிப், காமெடிதான் நம்ம ஏரியா மக்களும் நம்மிடம் இருந்து அதைதான் எதிர்பார்க்கிறார்கள். அதையே செய்வதுதான் நமக்கும் உத்தமம்.
“ V.S.O.Pனா ‘வாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க’ இருவரும் சிறு வயதிலிருந்து நண்பர்கள். இவர்கள் இடையே பெண்களால் ஏற்படும் விளைவுகளை மிக கலாட்டாவாக சொல்லியிருக்கிறோம். படம் முழுக்க இரண்டு நண்பர்கள் ஒருவருக்கொருவர் நிஜ வாழக்கையில் எப்படி கலாய்த்து கொள்வார்களோ அதே இயல்புடன் ஆர்யாவும் சந்தானமும் வருகிறார்கள்.
ரசிகர்கள் அனைவரையும் டீசர் கவர்ந்துள்ளது மிகவும் மகிழ்ச்சியாகவுள்ளது. படத்தின் ஒற்றை பாடல் வரும் ஜூலை 21 ஆம் தேதி வெளியாகவுள்ளது. நிரவ் ஷா ஒளிப்பதிவில், விவேக் ஹர்ஷன் படத்தொகுப்பு மேற்கொள்ள, D இமானின் இசையமைப்பில் உருவாகியுள்ளது V.S.O.P. ஆகஸ்ட் 14ஆம் தேதி மக்கள் மகிழ்ந்திட திரையரங்குகளில் V.S.O.P வெளியாகவுள்ளது. உங்கள் நண்பர்களோடு நீங்கள் கழித்த அந்த ஜாலியான நாட்களை இந்த ‘வாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க’  மீண்டும் நினைவில் நிறுத்தும்" என்றார்.

Comments