Trisha Refurbished Longue The Antique Jewellery at Mylapore NAC Store Images!!! பணம் வேண்டாம் தங்கமாக கொடுங்க: வரித்துறையிடம் இருந்து தப்பிக்க திரிஷா பிளான்!!!

24th of July 2015
சென்னை:Tags : Trisha at NAC Store Photos, Trisha Launch Antique Jewellery at Mylapore Images, Antique Jewellery Launch Gallery, Antique Jewellery Release Event Stills, Antique Jewellery Launch Function Pictures
 
சினிமா நடிகர், நடிகைகள் திரைப்படங்களில் நடித்து சம்பாதிப்பதுடன்,  விளம்பரப் படங்கள், கடை திறப்பு, பொது நிகழ்ச்சிகளில்  பங்கேற்பு போன்றவற்றின் மூலமாகவும் சம்பாதித்து வருகிறார்கள்.

















ஒரு காலத்தில், மக்களுக்கு அவ்வளவாக அறிமுகம் இல்லாத நடிகர்கள் விளம்பரப் படங்களில் நடித்து வந்தார்கள். ஆனால், தற்போது முன்னணி நடிகர்களும், நடிகைகளும் விளம்பரங்களில் நடிக்க பெரிதும் ஆர்வம் காட்டி வருகிறார்கள். காரணம் குறைந்த நாட்கள் வேலை, அதிக சம்பளம் என்பதால் தான்.

ஒரு படம் வெற்றி பெற்றுவிட்டால் போதும், அந்த படத்தில் நடித்த நடிகரோ அல்லது நடிகையோ தியாகராய நகரில் உள்ள பெரிய ஆடை கடையின் சுவற்றில் பளிச்சிடுவதுடன், அந்த கடை குறித்த விளம்பரப் படத்தில் ஆடி, பாட ஆரம்பித்து விடுகிறார்கள்.

அந்த வகையில், தற்போது விளம்பரப் படங்களில் திரிஷாவும் அதிகமாக தலை காட்ட தொடங்கிவிட்டார்.

சோப்பு, ஐஸ் க்ரீம் என்று ஆரம்பித்து, தற்போது சென்னையின் முன்னணி நகை கடை ஒன்றுக்கும் விளம்பரத் தூதுவராக நியமிக்கப்பட்டுள்ள திரிஷா, விளம்பரப் படங்களின் மூலம் வரும் வருவாயை கணக்கு காட்டாமல் தப்பிப்பதற்காக புது ரூட்டு  ஒன்றை போட்டுள்ளார்.

அதாவது, நகை கடை விளம்பரங்களில்  தான் நடித்ததற்கு சம்பளமாக, பணமாக அல்லாமல்  நகையாக கொடுத்திடுங்க, என்று கேட்டுள்ளார்.

இன்று சென்னையில் நடைபெற்ற என்.ஏ.சி நகைக் கடையின், புது ரக தங்க நகைகள் அறிமுக விழாவில் கலந்துக்கொண்ட நடிகை திரிஷா இந்த விஷயத்தை அந்த நகைக்கடை உரிமையாளரிடம் தெரிவித்துள்ளார்.

திரிஷா இதை விளையாட்டாக கூறினாலும், பணமாக பெறுவதை விட அன்பளிப்பாக பெற்றால் வரித்துறையிடம் இருந்து எஸ்கேப்பாகி விடலாம், என்று அவர் திட்டமிடுவதாக நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு மீடியா நண்பர்கள் பேசிக்கொண்டார்கள். 

Comments