Thani Oruvan Movie Stills!!! தனி ஒருவன்' படப்பிடிப்பு முடிந்தது - ஆகஸ்ட் மாதம் ரிலீஸ்!!!

'8th of July 2015
சென்னை:ஜெயம்', 'சந்தோஷ் சுப்பிரமணியம்', 'உனக்கும் எனக்கும்', 'வேலாயுதம்' என தொடர்ந்து பல வெற்றிப் படங்களைக் கொடுத்த இயக்கும ஜெயம் ராஜா, ஜெயம் ரவி - நயன்தாராவை வைத்து இயக்கி வரும் படம் 'தனி ஒருவன்'.

ஜெயம் ராஜா தனது பெயரை மோகன் ராஜா என்று மாற்றியமைத்துக் கொண்டு இயக்கம் இப்படம், அவரது கனவு படமாகும். இப்படத்தில் அரவிந்த்சாமி, இதுவரை நடித்திராத முக்கிய வேடம் ஒன்றில் நடிக்கிறார். இவர்களுடன் தம்பி ராமைய்யா, கணேஷ் வெங்கட்ராமன், நாசர் மற்றும் பலர் நடிக்கிறார்கள்.
ஹிப்ஹாப் தமிழா புகழ் ஆதி இசையமைக்கும் இப்படத்திற்கு ராம்ஜி ஒளிப்பதிவு செய்கிறார். மிகுந்த பொருட்செலவில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள இப்படத்தினை  இப்படத்தை ஏ.ஜி.எஸ் எண்டர்டெயின்மெண்ட சார்பாக கல்பாத்தி எஸ்.அகோரம், கல்பாத்தி எஸ்.கணேஷ், கல்பாத்தி எஸ்.சுரேஷ் ஆகியோர்  தயாரித்துள்ளார்.
படத்தொகுப்பை கோபி கிருஷ்ணாவும், கலை இயக்கத்தை வி.செல்வகுமார் மேற்கொண்டுள்ளனர்.
டெஹரடூன், மசூரி, கோவா, பேங்காக் போன்ற பகுதிகளில் படமாக்க பட்ட தனி ஒருவன், தற்போது படபிடிப்பு முழுவதும் முடிந்து இறுதிகட்ட மும்முரமாக நடைபெற்று வருகிறது.
இப்படத்தின் இசை, இப்படத்தின் வெற்றியை மேலும் உறுதியடைய செய்துள்ளது என்று மகிழ்ச்சியுடன் கூறுகிறார் இயக்குனர் மோகன் ராஜா.
இப்படத்தின் இசை ஜுலை 15ம் தேதியும், படம் ஆகஸ்ட் மாதமும் வெளியீட திட்டமிடப்பட்டுள்ளது.





Comments