26th of July 2015
சென்னை:தெலுங்கு சூப்பர் ஸ்டார் நடித்த ஸ்ரீமந்துடு திரைப்படம் முதன்முதலாக ஒரே நேரத்தில் தெலுங்கு மற்றும் தமிழ் மொழிகளில் வெளிவரவுள்ளது என்பதை ஏற்கனவே பார்த்தோம். இதற்காக மகேஷ்பாபுவே தமிழ் டப்பிங் பணிகளில் கடந்த சில நாட்களாக ஈடுபட்டிருந்தார். பாகுபலி' போன்ற தெலுங்கு திரைப்படங்கள் அபரீதமான வசூலை தமிழகத்தில் கொடுத்ததால், மகேஷ்பாபு தமிழில் ரிலீஸ் செய்யும் முடிவை எடுத்தார் என கூறப்பட்டது.
Tags : Selvandhan New Movie Photos, Selvandhan Latest Movie Gallery, Selvandhan Unseen Movie Pictures, Selvandhan Film Latest images, Selvandhan Movie Hot Stills, Selvandhan Movie New Pics
இந்நிலையில் இந்த படத்தின் தமிழ் பதிப்பிற்கு 'செல்வந்தன்' என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. இந்த டைட்டிலோடு தற்போது இந்த படத்தின் தமிழ் போஸ்டர்கள் இணையத்தில் படக்குழுவினர்களால் ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் இந்த படத்தின் தமிழ் பதிப்பிற்கு 'செல்வந்தன்' என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. இந்த டைட்டிலோடு தற்போது இந்த படத்தின் தமிழ் போஸ்டர்கள் இணையத்தில் படக்குழுவினர்களால் ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது.
நம்மூர் சூப்பர் ஸ்டார் விஜய்யின் ஜில்லா நேற்று தெலுங்கு மாநிலங்களில் ரிலீஸாகி வெற்றி பெற்று வரும் நிலையில் தெலுங்கு சூப்பர் ஸ்டாரின் படம் ஒன்று நேரடியாக தமிழில் ரிலீஸாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
மகேஷ்பாபு, ஸ்ருதிஹாசன், ஜெகதிபாபு, சுகன்யா, பிரம்மானந்தம், சனம் ஷெட்டி மற்றும் பூர்ணா ஆகியோர் உள்பட பலர் நடித்திருக்கும் இந்த படத்திற்கு விஜய்யின் 'புலி' பட இசையமைப்பாளர் தேவிஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். கொரட்டாலா சிவா இயக்கியுள்ள இந்த படம் வரும் ஆகஸ்ட் 7ஆம் தேதி தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இருமொழிகளில் பிரமாண்டமாக ரிலீஸ் ஆகவுள்ளது.
Comments
Post a Comment