Pugazh - Official Trailer!!! அக்க்ஷன் ஹீரோவாக நடிக்கும் நடிகர் ஜெய்!!!


24th of July 2015
சென்னை:இயக்குனர் மணிமாறன் இயக்கத்தில் ஜெய், சுரபி நடித்துள்ள திரைப்படம் ‘புகழ்’. ஃபிலிம் டிபார்ட்மென்ட் சுஷாந்த் பிரசாத் தயாரிப்பில் வருண் மணியனின் ரேடியன்ஸ் மீடியா வெளியிடும் ‘புகழ்’ திரைப்படத்தின் டிரைலர் இன்று வெளியிடப்பட்டது. அதிரடி நிறைந்த இந்த டிரைலர் அனைவரையும் கவர்ந்துள்ளது.
 
ஆக்க்ஷன் த்ரில்லர் படமாக உருவாகியிருக்கும் இப்படத்தில் ‘ஜெய்’ தனது ரொமாண்டிக் ஹீரோ தடத்திலிருந்து வேறுபட்டு ஒரு வலிமைமிக்க எதார்த்தமான அக்க்ஷன் ஹீரோ கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். சமீபகாலமாக கார் ரேஸில் ஈடுபடுவதன்மூலம் தன்னுடைய தகுதியை பெரிதளவும் மாற்றிக் கொண்டுள்ள ஜெய் இந்த அக்க்ஷன் ஹீரோ கதாபாத்திரத்தில் கச்சிதமாக பொருந்தியிருக்கிறார்.
 
மேலும், அரசியலை பின் புலனாக கொண்ட இந்த ‘புகழ்’ படத்தில் ஜெய்யின் கதாப்பாத்திரம் அவரது நட்சத்திர அந்தஸ்துக்கு மெருகேற்றுவதாய் அமையும் என்பது திண்ணம்.

Comments