Maari Movie Stills!!! சொன்ன தேதியில் மாரி வெளியாக 2 கோடி இழந்த தனுஷ்!!!

18th of July 2015
சென்னை:ஜுலை 17 ரமலானுக்கு மாரி, வாலு வெளியாகும் என்று கூறி கடைசியில் மாரி மட்டுமே வெளியானது. ஆறு வழக்குகள் வாலு படத்தை பின்னி பிணைந்திருப்பதால் அடுத்த ரமலானுக்காவது அப்படம் வெளிவருமா என்பது சந்தேகம்.
 
மாரி படம்கூட இரண்டு கோடி இழப்பில்தான் வெளிவந்தது என்கிறார்கள்.












மாரி படத்தை மேஜிக் ப்ரேம்ஸ் தயாரித்தது. ராதிகா சரத்குமார், சரத்குமார் இருவரும் மேஜிக் ப்ரேம்ஸ் சார்பில் தயாரித்த புலிவால் உள்ளிட்ட படங்கள் தோல்வியை தழுவின. அந்த நஷ்டத்துக்கு ஈடுசெய்ய வேண்டும் என்று விநியோகஸ்தர் தரப்பில் கூறப்பட்டது.
மாரியின் வெளிநாட்டு ப்ரீமியர் காட்சிகள் இதனால் ரத்து செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது. கடைசியில் தனுஷ் தனக்கு வரவேண்டிய சம்பளப் பாக்கியில் இரண்டு கோடியை விட்டுத்தர, சரியான நேரத்தில் மாரி திரைக்கு வந்தது.
மாரியின் தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமையை எந்த சேனலும் வாங்க முன்வராததால் தனுஷே 9 கோடிக்கு ஒளிபரப்பு உரிமையை வாங்கியதாகவும் கிசுகிசுக்கிறார்கள்.

Comments