நடிகர்களை பாடவைப்பது பப்ளிசிட்டிக்காகத்தான்: இமான் ஓபன் டாக்!!!

23rd of July 2015
சென்னை:அனேகமாக தமிழ்சினிமாவில் நடிகர் நடிகைகளை அதிகம் பாடவைத்த இசையமைப்பாளர் டி.இமானாகத்தான் இருக்கும். டண்டணக்கா’ கொண்டாட்டம் முடிந்து, சமீபத்தில் ரஜினிமுருகனுக்காக இவர் போட்ட, “என்னம்மா இப்டி பண்றீங்கலேம்மா” பாடல் தான் யூத்துகளிடம் பரவியுள்ள லேட்டஸ்ட் ஜுரம். பள்ளிக்கூடம் போகும் இவரது மகனே, “என்னப்பா இப்டி பண்றியேப்பா” என இமானை கலாய்க்கிறானாம்.

நடிகர்களை பாடவைப்பதால் படத்திற்கு பப்ளிசிட்டி கிடைப்பது உண்மைதான் என்பதை இமானும் ஒத்துக்கொள்கிறார். அதேசமயம் சில நடிகர்கள் சரியாக பாடாத பாடல்களை அப்படியே ஓரமாய் தூக்கியும் வைத்திருக்கிறாராம் இமான். இவரது இசையில் பாடி இவரை ஆச்சர்யப்படுத்தியவர்கள் என்றால் லட்சுமி மேனனும் சிவகார்த்திகேயனும் தானாம்.

Comments