28th of July 2015
சென்னை:தொடர்ந்து ஏ.ஆர்.ரகுமான் இசைக்குழுவில் முக்கிய இடம்பிடித்த பின்னணி பாடகர் அஸ்லாம் முதன்முறையாக கானாவில் குதிக்கிறார். “இன்றைக்கு கானா பாடல்கள் என்பவை தவிர்க்க முடியாதவை ஆகிவிட்டன. படங்களின் புரமோஷனுக்கு கூட அவைதான் பயன்படுகின்றன. உலக அளவில் கானாவுக்கு நல்ல வரவேற்பு இருக்கிறது. அதனால் நானும் கானாவில் இறங்க முடிவு செய்தேன்” என்கிறார் அஸ்லாம்.
டுமீல் குப்பம் என்கிற படத்தில் சந்தோஷ் இசையில் தான் இந்த கானா அரங்கேற்றம் நடந்துள்ளது. “சென்ட்ரல் ஸ்டாண்டுனா ஓட்டேரிதான்.. உன் கூட சுத்துற வேலைக்கு நா ரெடிதான் என சென்னை ஏரியாவை ரவுண்டப் பண்ணி இந்தப்பாடலை இசையமைப்பாளர் சந்தோஷே எழுதியுள்ளார்.. இவர் ஏற்கனவே மாலுமி படத்தில் கானா பாலாவுக்காக ஒரு பாடல் எழுதியவர் தான்.
Comments
Post a Comment