30th of July 2015
சென்னை:இயக்குனர் ராஜேஷின் படங்கள் எல்லாமே இரண்டு நபர்கள் அவர்களுக்குள் ஏற்படும் கலாட்டா என கிட்டத்தட்ட ஒரே சாயலில் இருக்கிறதே என நம்மில் பலரும் நினைத்திருப்போம்.. ஆனால் இன்று நடைபெற்ற ‘வாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க’ படத்தின் இசை வெளியீட்டு விழாவில் சந்தானம் அதற்கான விளக்கத்தை கொடுத்துள்ளார்.
விழாவில் பேசிய சந்தானம், “ராஜேஷ் படங்கள் எல்லாம் ஒரே சாயலில் இருப்பதாக சொல்கிறார்கள்.. அவரது படங்கள் எல்லாம் ஐ போன் மாதிரி.. போன் ஒரே மாதிரி இருந்தாலும் அதில் இருக்கும் விஷயங்கள் நாளுக்கு நாள் அப்டேட் ஆகிக் கொண்டே இருக்கும்,” என்றார். இந்தப்படம் ஆகஸ்ட்-14ஆம் தேதி ரிலீசாகிறது.
Comments
Post a Comment