பிடித்த ஹீரோக்களுக்கு செல்லப் பெயர் வைக்கும் ஹீரோயின்கள்!!!

16th of July 2015
சென்னை:மில்கி ஒயிட் என தமன்னாவுக்கும், சுவீட்டி என அனுஷ்காவுக்கும் இண்டஸ்ட்ரியில் செல்லப்பெயர் உள்ளது. ஒவ்வொரு ஹீரோயினுக்கும் செல்லப்பெயர் வைத்து நடிகைகள் அழைத்துக்கொள்கிறார்கள். அதேபோல் பிடித்தமான ஹீரோக்களுக்கு சக ஹீரோயின்கள் செல்லப்பெயர் வைப்பதும் ரகசியமாக நடக்கிறது.

அப்படியொரு ஹீரோவுக்கு திரிஷா வைத்த செல்லப்பெயர் வெளியாகி உள்ளது. நடிகைகளை நட்பு வட்டத்துக்குள் வெகு சீக்கிரமாக இழுத்துக்கொள்ளும் மச்சம் கொண்டவர் ஆர்யா. உடன் நடிக்கும் நடிகைகள் மட்டுமல்லாமல் உடன் நடிக்காத நடிகைகளையும் இவர் தனது வட்டத்துக்குள் சிக்கவைத்து விடுகிறார். இதற்கு அவரது அம்மா செய்யும் பிரியாணியும் ரொம்பவே கைகொடுக்கிறது. நயன்தாரா, அனுஷ்கா வரிசையில் திரிஷாவும் ஆர்யாவின் நெருங்கிய தோழிகளில் ஒருவர். ஆர்யாவின் பட விழாக்களில் அவர் கலந்துகொள்வதுடன் சர்வம் படத்தில் அவருடன் ஜோடி சேர்ந்து நடித்திருக்கிறார்.
 
ஆர்யா நடிக்கும் புதிய படத்துக்கு இணைய தளத்தில் வாழ்த்துக்கள் தெரிவித்திருக்கும் திரிஷா, ஆர்யாவை செல்லமாக குஞ்சுமணி என்று குறிப்பிட்டு எழுதியுள்ளார். இதேபோல் நயன்தாரா, சமந்தா உள்ளிட்டோரும் ஒரு சில ஹீரோக்களுக்கு ரகசிய செல்லப் பெயர் வைத்துள்ளதாக கூறப்படுகிறது.

Comments