8th of July 2015
சென்னை:பிரமாண்டமாக தயாராகி வரும் பிரஷாந்தின் 'சாஹசம்'. பட கதாநாயகியாக அமண்டா அறிமுகமாகிறார். சாஹசம், படம் பாடல், ஆடல், அழகு ஆகிய மூன்றுக்கும் முக்கியத்துவம் தந்து எழுதப்பட்ட கதை.
சென்னை:பிரமாண்டமாக தயாராகி வரும் பிரஷாந்தின் 'சாஹசம்'. பட கதாநாயகியாக அமண்டா அறிமுகமாகிறார். சாஹசம், படம் பாடல், ஆடல், அழகு ஆகிய மூன்றுக்கும் முக்கியத்துவம் தந்து எழுதப்பட்ட கதை.
கடந்த 20 நாட்களாக தொடர்ந்து மலேசியா மற்றும் ஜப்பானில் பாடல் காட்சிகள்
படமாக்கப்பட்டது. பிரஷாந்துடன் இந்தியாவிலிருந்து 20க்கும் மேற்பட்ட
நடனகலைஞர்கள் மற்றும் மலேசிய நடனகலைஞர்கள் சேர்ந்து ஆடிய ‘’சாயாங் கு’’
என்ற பாடல் காட்சி மலேசியா மொத்தமும் தொடர்ந்து 8 நாட்கள் படமாக்கப்பட்டது.
பாபா பாஸ்கர் விசேஷமான நடன அசைவுகளை சாஹசம் படத்திற்காக பிரத்யேகமாக
அமைத்துள்ளார். ’’சாயாங் கு’’ என்றால் மலேசிய பாஷையில் கண்ணே, அன்பே,
ஆருயிரே என்று காதலர்களுக்குள் வழங்கும் ஒரு பாசமான அழைப்பு. ’’சாயாங் கு’’
பாடல் மலேசியா மட்டுமல்லாமல் உலகிலுள்ள மொத்த இளைஞர்களுக்கும்,
காதலர்களுக்கும் கீதமாகுமாம்.
மலேசியாவை தொடர்ந்து ‘ஆங்கிரி பேர்ட் (Angry Bird) என்ற பாடல் ஜப்பானில்
8 நாட்கள் நடைபெற்றது. 20க்கும் மேற்பட்ட ஜப்பானிய நடன கலைஞர்கள் கலந்து
கொண்டு ஜப்பானில் எழில் கொஞ்சும் இயற்கை அழகுமிக்க இடங்களில் பிரஷாந்த்,
அமண்டாவுடன் சேர்ந்து நடனமாடும் காட்சிகளை காயத்ரி ரகுராம் நேர்த்தியாக
படமாக்கினார். இந்த பாடலை இந்தியாவில் தலைசிறந்த பாடகரான மோஹித் சவுகான்
பாடியுள்ளார்.
ஹாலிவுட் நடிகையான நர்கிஸ் பக்ரி சாஹசம் படத்தில் ஒரே ஒரு பாடலுக்கு மட்டும் நடனமாடியுள்ளார்.
மிகப்பெரிய நடிகரான பிரஷாந்துடன் இணைந்து அற்புதமாக உருவாகும் சாஹசம்
படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது தான் செய்த பாக்கியம் என மனம் உருகி
போகிறாராம் அமண்டா.
பிரஷாந்த், அமண்டா, நர்கிஸ் பக்ரியுடன் இணைந்து நாசர், தம்பி ராமைய்யா,
சோனுசூது, எம்.எஸ்.பாஸ்கர், ஜான் விஜய், ரோபோ சங்கர், அபி சரவணன், துளசி,
தேவதர்ஷினி, லீமா பாபு, மலேசியா அபிதா, நளினி, சின்னி ஜெயந்த், பெசன்ட்
நகர் ரவி, சுவாமி நாதன், லண்டன் இந்து, பிரம்மாஜி, சாய்பிரஷாந்த், ஹேமா,
ராவ்ரமேஷ், கோட்டா சீனிவாசராவ், ரியாஸ்கான், கிருஷ்ணவம்சி, மிப்பு, ஹலோFM
சுரேஷ், ராஜேந்திரநாத், என ஒரு நட்சத்திர பட்டாளமே நடித்து வருகிறார்கள்.
கலை- மிலன், எடிட்டிங்- ஜாஷி உமர், சண்டை பயிற்சி- கனல் கண்ணன்,
ஸ்டில்ஸ்- சிற்றரசு, நடனம்- ராஜுசுந்தரம், பாபா பாஸ்கர், காயத்ரி ரகுராம். ஒளிப்பதிவு:-சக்தி சரவணன், S.சௌந்தராஜன், ஷாஜிகுமார்.
தயாரிப்பு நிர்வாகம்:- கே.ஆனந்த் மற்றும் K.சக்திவேல்,
அருண்ராஜ் வர்மா சாஹசம் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகிறார்.
இசை- தமன், பாடல்கள்- மதன் கார்க்கி, நா.முத்துக்குமார், யுகபாரதி,
கபிலன், திரைக்கதை, வசனம் எழுதி ஏராளமான பொருட்செலவில் சாஹசம் படத்தை
ஸ்டார் மூவிஸ் சார்பில் தயாரிக்கிறார் நடிகர் தியாகராஜன்.
முடிவடையும் தருவாயிலுள்ள பிரஷாந்தின் சாஹசம் படம் வெகுவிரைவில் திரைக்கு வரும் என எதிர்ப்பார்க்கலாம்.
சாஹசம் படத்தின் பாடல் வெளீயீட்டு விழா வெகு விரைவில் நடைபெறும்,
மிகப்பெரிய எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள சாஹசம் படம் ரசிகர்களின் ஆவலை
பூர்த்தி செய்யும் வண்ணம் இருக்குமாம்.
Comments
Post a Comment