லக்ஷ்மி ராமகிருஷ்ணன் இயக்கம் 'அம்மணி': படபிடிப்பு முடிந்தது!!!

13th of July 2015சென்னை:ஆரோகணம்', 'நெருங்கி வா முத்தமிடாதே' ஆகியப் படங்களை தொடர்ந்து லக்ஷ்மி ராமகிருஷ்ணன் இயக்கம் மூன்றாவது படம் 'அம்மணி'.
டக் எண்டெர்னெயின்மெண்ட் நிறுவனம் சார்பில், வெண் கோவிந்தா தயாரிக்கும் இப்படத்தின் நாயகியாக 82 வயதான சுப்புலட்சுமி பாட்டி நடிக்கிறார். ஏற்கனவே இப்படத்தின் பஸ்ட் லுக் பொஸ்டர் வெளியாகி அனைவராலும் பாராட்டப்பட்டது. 

தற்பொது 'அம்மணி' படத்தின் படப்பிடிப்பு முழுவதுமாக முடிந்துள்ளது. இப்படத்தின் இறுதி நாள் படப்பிடிப்பு சமீபத்தில் நடைபெற்றது. இதில் இறுதி ஊர்வல காட்சி ஒன்று படமாக்கப்பட்டது. இதில் இயக்குனர் லக்ஷ்மி ராமகிருஷ்ணன் நடித்து, காட்சியை இயக்கவும் செய்தார்.
இது குறித்து கூறிய லக்ஷ்மி ராமகிருஷ்ணன், "‘அம்மணி’ படத்தின் இறுதி நாள் படப்பிடிப்பில் இறுதி ஊர்வலம் காட்சியாக்கப்பட்டது. இக்காட்சியில் இறந்தவராக அவரே நடித்து இயக்கவும் செய்தார் லக்ஷ்மி ராமகிருஷ்ணன். “இக்காட்சியில் நடிக்கும்பொழுது என் மனம் மிகவும் கனத்திருந்தது. இது ஒரு இறுதி அஞ்சலி காட்சி என்பது மட்டுமல்லாமல் படத்தின் கடைசி நாள் படப்பிடிப்பு என்பது ஒரு பெரும் காரணமாய் இருந்தது.
கடைசி நாள் படப்பிடிப்பிக்கு என்னோடு வந்த எனது இளைய மகள் இந்தக் காட்சியை பார்த்து முதலில் சற்று வருந்தினாலும்,இது வெறும் நடிப்புதான் எனப் புரிந்து கொண்டார்.
முதல் நாள் படப்பிடிப்பு நடந்த அதே இடத்தில் இறுதிநாள் படப்பிடிப்பும் நடந்தது குறிப்பிடத்தக்கது. எங்கள் படக் குழுவினரின் இந்த அயராத உழைப்பு கண்டிப்பாக பாராட்டுகளும் விருதுகளும் பெறும் என நம்புகிறோம்”. என்று தெரிவித்தார்.
 

 
 

Comments